Pasuram 1 · corpus 13
Pasuram 1
வண்ண மாடங்கள் சூழ் * திருக்கோட்டியூர் *
கண்ணன் கேசவன் * நம்பி பிறந்தினில் **
எண்ணெய் சுண்ணம் * எதிரெதிர் தூவிட *
கண்ணன் முற்றம் * கலந்து அளறு ஆயிற்றே (1)
Periyalvar · Pasurams 1–10
Corpus pasurams 13–22
This page preserves the source-defined decade 1, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 1 · corpus 13
வண்ண மாடங்கள் சூழ் * திருக்கோட்டியூர் *
கண்ணன் கேசவன் * நம்பி பிறந்தினில் **
எண்ணெய் சுண்ணம் * எதிரெதிர் தூவிட *
கண்ணன் முற்றம் * கலந்து அளறு ஆயிற்றே (1)
Pasuram 2 · corpus 14
ஓடுவார் விழுவார் * உகந்து ஆலிப்பார் *
நாடுவார் நம்பிரான் * எங்குற்றான் என்பார் **
பாடுவார்களும் * பல்பறை கொட்ட நின்று *
ஆடுவார்களும் * ஆயிற்று ஆய்ப்பாடியே (2)
Pasuram 3 · corpus 15
பேணிச் சீர் உடைப் * பிள்ளை பிறந்தினில் *
காணத் தாம் புகுவார் * புக்குப் போதுவார் **
ஆண் ஒப்பார் * இவன் நேர் இல்லை காண் *
திருவோணத்தான் * உலகு ஆளும் என்பார்களே (3)
Pasuram 4 · corpus 16
உறியை முற்றத்து * உருட்டி நின்று ஆடுவார் *
நறுநெய் பால் தயிர் * நன்றாகத் தூவுவார் **
செறி மென் கூந்தல் * அவிழத் திளைத்து *
எங்கும் அறிவு அழிந்தனர் * ஆய்ப்பாடி ஆயரே (4)
Pasuram 5 · corpus 17
கொண்ட தாள் உறி * கோலக் கொடுமழுத்
தண்டினர் * பறியோலைச் சயனத்தர் **
விண்ட முல்லை * அரும்பு அன்ன பல்லினர் *
அண்டர் மிண்டிப் * புகுந்து நெய்யாடினார் (5)
Pasuram 6 · corpus 18
கையும் காலும் நிமிர்த்துக் * கடார நீர் *
பைய ஆட்டிப் * பசுஞ் சிறு மஞ்சளால் **
ஐய நா வழித்தாளுக்கு * அங்காந்திட *
வையம் ஏழும் கண்டாள் * பிள்ளை வாயுளே (6)
Pasuram 7 · corpus 19
வாயுள் வையகம் கண்ட * மடநல்லார் *
ஆயர் புத்திரன் அல்லன் * அருந்தெய்வம் **
பாய சீர் உடைப் * பண்பு உடைப் பாலகன் *
மாயன் என்று * மகிழ்ந்தனர் மாதரே (7)
Pasuram 8 · corpus 20
பத்து நாளும் கடந்த * இரண்டாம் நாள் *
எத் திசையும் * சயமரம் கோடித்து **
மத்த மா மலை * தாங்கிய மைந்தனை *
உத்தானம் செய்து * உகந்தனர் ஆயரே (8)
Pasuram 9 · corpus 21
கிடக்கில் தொட்டில் * கிழிய உதைத்திடும் *
எடுத்துக் கொள்ளில் * மருங்கை இறுத்திடும் **
ஒடுக்கிப் புல்கில் * உதரத்தே பாய்ந்திடும் *
மிடுக்கு இலாமையால் * நான் மெலிந்தேன் நங்காய் (9)
Pasuram 10 · corpus 22
செந்நெல் ஆர் வயல் சூழ் * திருக்கோட்டியூர் *
மன்னு நாரணன் * நம்பி பிறந்தமை **
மின்னு நூல் * விட்டுசித்தன் விரித்த *
இப் பன்னு பாடல் வல்லார்க்கு * இல்லை பாவமே (10)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.