Corpus pasurams 23–43

This page preserves the source-defined decade 1, chapter 2 grouping and brings its 21 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 11 · corpus 23

Pasuram 11

Study resources at Uveda
சீதக்கடலுள் * அமுது அன்ன தேவகி *
 கோதைக் குழலாள் * அசோதைக்குப் போத்தந்த **
 பேதைக் குழவி * பிடித்துச் சுவைத்து உண்ணும் *
 பாதக் கமலங்கள் காணீரே * பவள வாயீர் வந்து காணீரே (2)

Pasuram 12 · corpus 24

Pasuram 12

Study resources at Uveda
முத்தும் மணியும் * வயிரமும் நன்பொன்னும் *
 தத்திப் பதித்துத் * தலைப்பெய்தால் போல் ** எங்கும்
 பத்து விரலும் * மணிவண்ணன் பாதங்கள் *
 ஒத்திட்டு இருந்தவா காணீரே * ஒண்ணுதலீர் வந்து காணீரே (2)

Pasuram 13 · corpus 25

Pasuram 13

Study resources at Uveda
பணைத்தோள் இள ஆய்ச்சி * பால் பாய்ந்த கொங்கை *
 அணைத்து ஆர உண்டு * கிடந்த இப் பிள்ளை **
 இணைக்காலில் * வெள்ளித் தளை நின்று இலங்கும் *
 கணைக்கால் இருந்தவா காணீரே * காரிகையீர் வந்து காணீரே (3)

Pasuram 14 · corpus 26

Pasuram 14

Study resources at Uveda
உழந்தாள் நறுநெய் * ஒரோர் தடா உண்ண *
 இழந்தாள் எரிவினால் * ஈர்த்து எழில் மத்தின் **
 பழந்தாம்பால் ஓச்ச * பயத்தால் தவழ்ந்தான் *
 முழந்தாள் இருந்தவா காணீரே * முகிழ்முலையீர் வந்து காணீரே (4)

Pasuram 15 · corpus 27

Pasuram 15

Study resources at Uveda
பிறங்கிய பேய்ச்சி * முலை சுவைத்து உண்டிட்டு *
 உறங்குவான் போலே * கிடந்த இப்பிள்ளை **
 மறம் கொள் இரணியன் * மார்வை முன் கீண்டான் *
 குறங்குகளை வந்து காணீரே * குவிமுலையீர் வந்து காணீரே (5)

Pasuram 16 · corpus 28

Pasuram 16

Study resources at Uveda
மத்தக் களிற்று * வசுதேவர் தம்முடை *
 சித்தம் பிரியாத * தேவகிதன் வயிற்றில் **
 அத்தத்தின் பத்தாம் நாள் * தோன்றிய அச்சுதன் *
 முத்தம் இருந்தவா காணீரே * முகிழ்நகையீர் வந்து காணீரே (6)

Pasuram 17 · corpus 29

Pasuram 17

Study resources at Uveda
இருங்கை மதகளிறு * ஈர்க்கின்றவனை *
 பருங்கிப் பறித்துக் * கொண்டு ஓடும் பரமன்தன் **
 நெருங்கு பவளமும் * நேர்நாணும் முத்தும் *
 மருங்கும் இருந்தவா காணீரே * வாணுதலீர் வந்து காணீரே (7)

Pasuram 18 · corpus 30

Pasuram 18

Study resources at Uveda
வந்த மதலைக் * குழாத்தை வலிசெய்து *
 தந்தக் களிறு போல் * தானே விளையாடும் **
 நந்தன் மதலைக்கு * நன்றும் அழகிய *
 உந்தி இருந்தவா காணீரே * ஒளியிழையீர் வந்து காணீரே (8)

Pasuram 19 · corpus 31

Pasuram 19

Study resources at Uveda
அதிருங் கடல்நிற வண்ணனை * ஆய்ச்சி
 மதுரமுலை ஊட்டி * வஞ்சித்து வைத்துப் **
 பதறப் படாமே * பழந் தாம்பால் ஆர்த்த *
 உதரம் இருந்தவா காணீரே * ஒளிவளையீர் வந்து காணீரே (9)

Pasuram 20 · corpus 32

Pasuram 20

Study resources at Uveda
பெரு மா உரலில் * பிணிப்புண்டு இருந்து * அங்கு
 இரு மா மருதம் * இறுத்த இப் பிள்ளை **
 குரு மா மணிப்பூண் * குலாவித் திகழும் *
 திருமார்பு இருந்தவா காணீரே * சேயிழையீர் வந்து காணீரே (10)

Pasuram 21 · corpus 33

Pasuram 21

Study resources at Uveda
நாள்கள் ஓர் நாலைந்து * திங்கள் அளவிலே *
 தாளை நிமிர்த்துச் * சகடத்தைச் சாடிப்போய் **
 வாள் கொள் வளை எயிற்று * ஆருயிர் வவ்வினான் *
 தோள்கள் இருந்தவா காணீரே * சுரிகுழலீர் வந்து காணீரே (11)

Pasuram 22 · corpus 34

Pasuram 22

Study resources at Uveda
மைத் தடங்கண்ணி * யசோதை வளர்க்கின்ற *
 செய்த்தலை நீல நிறத்துச் * சிறுப்பிள்ளை **
 நெய்த்தலை நேமியும் * சங்கும் நிலாவிய *
 கைத்தலங்கள் வந்து காணீரே * கனங்குழையீர் வந்து காணீரே (12)

Pasuram 23 · corpus 35

Pasuram 23

Study resources at Uveda
வண்டு அமர் பூங்குழல் * ஆய்ச்சி மகனாகக்
 கொண்டு * வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு **
 அண்டமும் நாடும் * அடங்க விழுங்கிய *
 கண்டம் இருந்தவா காணீரே * காரிகையீர் வந்து காணீரே (13)

Pasuram 24 · corpus 36

Pasuram 24

Study resources at Uveda
எம் தொண்டை வாய்ச் சிங்கம் * வா என்று எடுத்துக்கொண்டு *
 அந் தொண்டை வாய் * அமுது ஆதரித்து ** ஆய்ச்சியர்
 தம் தொண்டை வாயால் * தருக்கிப் பருகும் * இச்
 செந் தொண்டை வாய் வந்து காணீரே * சேயிழையீர் வந்து காணீரே (14)

Pasuram 25 · corpus 37

Pasuram 25

Study resources at Uveda
நோக்கி யசோதை * நுணுக்கிய மஞ்சளால் *
 நாக்கு வழித்து * நீராட்டும் இந் நம்பிக்கு **
 வாக்கும் நயனமும் * வாயும் முறுவலும் *
 மூக்கும் இருந்தவா காணீரே * மொய்குழலீர் வந்து காணீரே (15)

Pasuram 26 · corpus 38

Pasuram 26

Study resources at Uveda
விண் கொள் அமரர்கள் * வேதனை தீர * முன்
 மண் கொள் வசுதேவர் * தம் மகனாய் வந்து **
 திண் கொள் அசுரரைத் * தேய வளர்கின்றான் *
 கண்கள் இருந்தவா காணீரே * கனவளையீர் வந்து காணீரே (16)

Pasuram 27 · corpus 39

Pasuram 27

Study resources at Uveda
பருவம் நிரம்பாமே * பாரெல்லாம் உய்யத் *
 திருவின் வடிவு ஒக்கும் * தேவகி பெற்ற **
 உருவு கரிய * ஒளி மணிவண்ணன் *
 புருவம் இருந்தவா காணீரே * பூண்முலையீர் வந்து காணீரே (17)

Pasuram 28 · corpus 40

Pasuram 28

Study resources at Uveda
மண்ணும் மலையும் * கடலும் உலகு ஏழும் *
 உண்ணுந் திறத்து * மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு **
 வண்ணம் எழில்கொள் * மகரக்குழை இவை *
 திண்ணம் இருந்தவா காணீரே * சேயிழையீர் வந்து காணீரே (18)

Pasuram 29 · corpus 41

Pasuram 29

Study resources at Uveda
முற்றிலும் தூதையும் * முன்கைமேல் பூவையும் *
 சிற்றில் இழைத்துத் * திரி தருவோர்களைப் **
 பற்றிப் பறித்துக்கொண்டு * ஓடும் பரமன்தன் *
 நெற்றி இருந்தவா காணீரே * நேரிழையீர் வந்து காணீரே (19)

Pasuram 30 · corpus 42

Pasuram 30

Study resources at Uveda
அழகிய பைம்பொன்னின் * கோல் அங்கைக் கொண்டு *
 கழல்கள் சதங்கை * கலந்து எங்கும் ஆர்ப்ப **
 மழ கன்றினங்கள் * மறித்துத் திரிவான் *
 குழல்கள் இருந்தவா காணீரே * குவிமுலையீர் வந்து காணீரே (20)

Pasuram 31 · corpus 43

Pasuram 31

Study resources at Uveda
சுருப்பார் குழலி * யசோதை முன் சொன்ன *
 திருப் பாதகேசத்தைத் * தென்புதுவைப் பட்டன் **
 விருப்பால் உரைத்த * இருபதோடு ஒன்றும் *
 உரைப்பார் போய் * வைகுந்தத்து ஒன்றுவர் தாமே (21)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.