Pasuram 451 · corpus 463
Pasuram 451
சென்னி ஓங்கு * தண் திருவேங்கடம் உடையாய்! * உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ! * தாமோதரா சதிரா! **
என்னையும் என் உடைமையையும் * உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு *
நின் அருளே புரிந்திருந்தேன் * இனி என் திருக்குறிப்பே? (1)
Periyalvar · Pasurams 451–461
Corpus pasurams 463–473
This page preserves the source-defined decade 5, chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 451 · corpus 463
சென்னி ஓங்கு * தண் திருவேங்கடம் உடையாய்! * உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ! * தாமோதரா சதிரா! **
என்னையும் என் உடைமையையும் * உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு *
நின் அருளே புரிந்திருந்தேன் * இனி என் திருக்குறிப்பே? (1)
Pasuram 452 · corpus 464
பறவை ஏறு பரமபுருடா! * நீ என்னைக் கைக்கொண்ட பின் *
பிறவி என்னும் கடலும் வற்றிப் * பெரும்பதம் ஆகின்றதால் **
இறவு செய்யும் பாவக் காடு * தீக்கொளீஇ வேகின்றதால் *
அறிவை என்னும் அமுத ஆறு * தலைப்பற்றி வாய்க்கொண்டதே (2)
Pasuram 453 · corpus 465
எம்மனா! என் குலதெய்வமே! * என்னுடைய நாயகனே! *
நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை * இவ் உலகினில் ஆர் பெறுவார்? **
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் * நாட்டில் உள்ள பாவம் எல்லாம் *
சும்மெனாதே கை விட்டு ஓடித் * தூறுகள் பாய்ந்தனவே (3)
Pasuram 454 · corpus 466
கடல் கடைந்து அமுதம் கொண்டு * கலசத்தை நிறைத்தாற்போல் *
உடல் உருகி வாய் திறந்து * மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன் **
கொடுமை செய்யும் கூற்றமும் * என் கோல் ஆடி குறுகப் பெறா *
தட வரைத் தோள் சக்கரபாணீ! * சார்ங்க வில் சேவகனே (4)
Pasuram 455 · corpus 467
பொன்னைக் கொண்டு உரைகல் மீதே * நிறம் எழ உரைத்தால் போல் *
உன்னைக் கொண்டு என் நாவகம்பால் * மாற்று இன்றி உரைத்துக்கொண்டேன் **
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் * என்னையும் உன்னில் இட்டேன் *
என் அப்பா என் இருடீகேசா! * என் உயிர்க் காவலனே! (5)
Pasuram 456 · corpus 468
உன்னுடைய விக்கிரமம் * ஒன்று ஒழியாமல் எல்லாம் *
என்னுடைய நெஞ்சகம்பால் * சுவர்வழி எழுதிக்கொண்டேன் **
மன் அடங்க மழு வலங்கைக் கொண்ட * இராம நம்பீ ! *
என்னிடை வந்து எம்பெருமான் * இனி எங்குப் போகின்றதே? (6) 6
Pasuram 457 · corpus 469
பருப்பதத்துக் கயல் பொறித்த * பாண்டியர் குலபதி போல் *
திருப் பொலிந்த சேவடி * என் சென்னியின் மேல் பொறித்தாய் **
மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய் * என்று என்று உன் வாசகமே *
உருப் பொலிந்த நாவினேனை * உனக்கு உரித்து ஆக்கினையே (7)
Pasuram 458 · corpus 470
அனந்தன்பாலும் கருடன்பாலும் * ஐது நொய்தாக வைத்து * என்
மனந்தனுள்ளே வந்து வைகி * வாழச் செய்தாய் எம்பிரான்! **
நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் * கண்கள் அசும்பு ஒழுக *
நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் * நேமி நெடியவனே (8)
Pasuram 459 · corpus 471
பனிக் கடலில் பள்ளி கோளைப் * பழகவிட்டு * ஓடிவந்து என்
மனக் கடலில் வாழ வல்ல * மாய மணாள நம்பீ ! **
தனிக் கடலே தனிச் சுடரே! * தனி உலகே என்று என்று *
உனக்கு இடமாய் இருக்க * என்னை உனக்கு உரித்து ஆக்கினையே (9)
Pasuram 460 · corpus 472
தட வரைவாய் மிளிர்ந்து மின்னும் * தவள நெடுங்கொடி போல் *
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே * தோன்றும் என் சோதி நம்பீ ! **
வட தடமும் வைகுந்தமும் * மதில் துவராபதியும் *
இட வகைகள் இகழ்ந்திட்டு * என்பால் இடவகை கொண்டனையே (10)
Pasuram 461 · corpus 473
வேயர் தங்கள் குலத்து உதித்த * விட்டுசித்தன் மனத்தே *
கோயில்கொண்ட கோவலனைக் * கொழுங்குளிர் முகில்வண்ணனை **
ஆயர் ஏற்றை அமரர் கோவை * அந்தணர் தம் அமுதத்தினை *
சாயை போலப் பாட வல்லார் * தாமும் அணுக்கர்களே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.