Corpus pasurams 453–462

This page preserves the source-defined decade 5, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 441 · corpus 453

Pasuram 441

Study resources at Uveda
துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த * வலையை அறப்பறித்து *
 புக்கினில் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் * இனிப் போக விடுவதுண்டே? **
 மக்கள் அறுவரைக் கல்லிடை மோத * இழந்தவள் தன் வயிற்றில் *
 சிக்கென வந்து பிறந்து நின்றாய்! * திரு மாலிருஞ் சோலை எந்தாய் (1)

Pasuram 442 · corpus 454

Pasuram 442

Study resources at Uveda
வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் * உன் தன் இந்திர ஞாலங்களால் *
 ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் * நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை **
 அளித்து எங்கும் நாடும் நகரமும் * தம்முடைத் தீவினை தீர்க்கல் உற்று *
 தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடைத் * திரு மாலிருஞ் சோலை எந்தாய் (2)

Pasuram 443 · corpus 455

Pasuram 443

Study resources at Uveda
உனக்குப் பணி செய்திருக்கும் தவம் உடையேன் * இனிப் போய் ஒருவன்
 தனக்குப் பணிந்து * கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் **
 புனத்தினைக் கிள்ளிப் புது அவி காட்டி * உன் பொன்னடி வாழ்க என்று *
 இனக் குறவர் புதியது உண்ணும் * எழில் மாலிருஞ் சோலை எந்தாய்! (3)

Pasuram 444 · corpus 456

Pasuram 444

Study resources at Uveda
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு * அங்கு ஓர் நிழல் இல்லை * நீருமில்லை உன்
 பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் * நான் எங்கும் காண்கின்றிலேன் **
 தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் * அங்கு ஓர் பொய்ச்சுற்றம் பேசிச் சென்று *
 பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய்! * திரு மாலிருஞ் சோலை எந்தாய் (4)

Pasuram 445 · corpus 457

Pasuram 445

Study resources at Uveda
காலும் எழா கண்ண நீரும் நில்லா * உடல் சோர்ந்து நடுங்கி * குரல்
 மேலும் எழா மயிர்க் கூச்சும் அறா * என தோள்களும் வீழ்வு ஒழியா **
 மால் உகளாநிற்கும் என் மனனே! * உன்னை வாழத் தலைப்பெய்திட்டேன் *
 சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் * திரு மாலிருஞ் சோலை எந்தாய் (5)

Pasuram 446 · corpus 458

Pasuram 446

Study resources at Uveda
எருத்துக் கொடி உடையானும் * பிரமனும் இந்திரனும் * மற்றும்
 ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு * மருந்து அறிவாரும் இல்லை **
 மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா! * மறு பிறவி தவிரத்
 திருத்தி * உன் கோயில் கடைப் புகப்பெய் * திரு மாலிருஞ் சோலை எந்தாய் (6)

Pasuram 447 · corpus 459

Pasuram 447

Study resources at Uveda
அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி * உன் பேர் அருளால் *
 இக்கரை ஏறி இளைத்திருந்தேனை * அஞ்சேல் என்று கை கவியாய்! **
 சக்கரமும் தடக்கைகளும் * கண்களும் பீதக ஆடையொடும் *
 செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்! * திரு மாலிருஞ் சோலை எந்தாய்! (7)

Pasuram 448 · corpus 460

Pasuram 448

Study resources at Uveda
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் * இன்றொடு நாளை என்றே *
 இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன் * இனி உன்னைப் போகலொட்டேன் **
 மைத்துனன்மார்களை வாழ்வித்து * மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்! *
 சித்தம் நின்பாலது அறிதி அன்றே * திரு மாலிருஞ் சோலை எந்தாய்! (8)

Pasuram 449 · corpus 461

Pasuram 449

Study resources at Uveda
அன்று வயிற்றில் கிடந்திருந்தே * அடிமை செய்யல் உற்றிருப்பன் *
 இன்று வந்து இங்கு உன்னைக் கண்டுகொண்டேன் * இனிப் போக விடுவதுண்டே? **
 சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் * திருச்சக்கரம் அதனால் *
 தென்றித் திசை திசை வீழச் செற்றாய்! * திரு மாலிருஞ் சோலை எந்தாய்! (9)

Pasuram 450 · corpus 462

Pasuram 450

Study resources at Uveda
சென்று உலகம் குடைந்தாடும் சுனைத் * திரு மாலிருஞ் சோலை தன்னுள்
 நின்ற பிரான் * அடிமேல் அடிமைத் திறம் * நேர்பட விண்ணப்பஞ்செய் **
 பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் * புதுவைக்கோன் விட்டுசித்தன் *
 ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் * உலகம் அளந்தான் தமரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.