This page preserves the source-defined chapter 1 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி *
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த *
அரவு அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும் *
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி **
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி *
திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும் *
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு * என்
கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (1)
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த *
வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ *
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் *
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் **
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை *
கடி-அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் *
மாயோனை மணத்தூணே பற்றி நின்று * என்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! (2)
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் *
எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு *
எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும் *
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற ** செம்பொன்
அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற *
அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் *
அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு * அங்கு
அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே (3)
அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு * ஏனை
அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும் *
தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித் *
திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும் **
களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக் *
கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும் *
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு * என்
உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே (6)
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி *
ஐம் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
துறந்து * இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத்
தொல் நெறிக்கண் * நிலைநின்ற தொண்டரான **
அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி *
அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் *
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் *
நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே (7)
தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள்
குழாம் குழுமித் * திருப்புகழ்கள் பலவும் பாடி *
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் *
மழை சோர நினைந்து உருகி ஏத்தி ** நாளும்
சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும் *
திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் *
போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப் *
பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே! (9)