Corpus pasurams 658–667

This page preserves the source-defined chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 12 · corpus 658

Pasuram 12

Study resources at Uveda
தேட்டு அருந் திறல் தேனினைத் * தென் அரங்கனைத் * திருமாது வாழ்
 வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி * மால் கொள் சிந்தையராய் **
 ஆட்டம் மேவி அலந்து அழைத்து * அயர்வு எய்தும் மெய்யடியார்கள் தம் *
 ஈட்டம் கண்டிடக் கூடுமேல் * அது காணும் கண் பயன் ஆவதே (1)

Pasuram 13 · corpus 659

Pasuram 13

Study resources at Uveda
தோடு உலா மலர் மங்கை தோளிணை தோய்ந்ததும் * சுடர் வாளியால் *
 நீடு மா மரம் செற்றதும் * நிரை மேய்த்ததும் * இவையே நினைந்து **
 ஆடிப் பாடி அரங்க ஓ என்று அழைக்கும் * தொண்டர் அடிப் பொடி
 ஆட நாம் பெறில் * கங்கை நீர் குடைந்து ஆடும் * வேட்கை என் ஆவதே? (2)

Pasuram 14 · corpus 660

Pasuram 14

Study resources at Uveda
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் * முன் இராமனாய் *
 மாறு அடர்த்ததும் மண் அளந்ததும் * சொல்லிப் பாடி ** வண் பொன்னிப் பேர்
 ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு * அரங்கன் கோயில் திருமுற்றம் *
 சேறு செய் தொண்டர் சேவடிச் * செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே (3)

Pasuram 15 · corpus 661

Pasuram 15

Study resources at Uveda
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் * உடன்று ஆய்ச்சி கண்டு *
 ஆர்த்த தோள் உடை எம்பிரான் * என் அரங்கனுக்கு அடியார்களாய் **
 நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து * மெய் தழும்பத் தொழுது
 ஏத்தி * இன்பு உறும் தொண்டர் சேவடி * ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே (4)

Pasuram 16 · corpus 662

Pasuram 16

Study resources at Uveda
பொய் சிலைக் குரல் ஏற்று எருத்தம் இறுத்தப் * போர் அரவு ஈர்த்த கோன் *
 செய் சிலைச் சுடர் சூழ் ஒளித் * திண்ண மா மதிள் தென் அரங்கனாம் **
 மெய் சிலைக் கருமேகம் ஒன்று * தம் நெஞ்சில் நின்று திகழப் போய் *
 மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து * என் மனம் மெய் சிலிர்க்குமே (5)

Pasuram 17 · corpus 663

Pasuram 17

Study resources at Uveda
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன * வானவர் தம்பிரான் *
 பாத மா மலர் சூடும் பத்தி இலாத * பாவிகள் உய்ந்திட **
 தீதில் நன்னெறி காட்டி * எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே *
 காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் * காதல் செய்யும் என் நெஞ்சமே (6)

Pasuram 18 · corpus 664

Pasuram 18

Study resources at Uveda
கார் இனம் புரை மேனி நற்கதிர் முத்த * வெண்ணகைச் செய்ய வாய் *
 ஆர மார்வன் அரங்கன் என்னும் * அரும் பெருஞ்சுடர் ஒன்றினை **
 சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து * கசிந்து இழிந்த கண்ணீர்களால் *
 வார நிற்பவர் தாளிணைக்கு * ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே (7)

Pasuram 19 · corpus 665

Pasuram 19

Study resources at Uveda
மாலை உற்ற கடல் கிடந்தவன் * வண்டு கிண்டு நறுந்துழாய் *
 மாலை உற்ற வரைப் பெருந் திரு மார்வனை * மலர்க் கண்ணனை **
 மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித் * திரிந்து அரங்கன் எம்மானுக்கே *
 மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு * மாலை உற்றது என் நெஞ்சமே (8)

Pasuram 20 · corpus 666

Pasuram 20

Study resources at Uveda
மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப * ஏங்கி இளைத்து நின்று *
 எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து * ஆடிப் பாடி இறைஞ்சி என் **
 அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடி யார்கள் ஆகி * அவனுக்கே
 பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் *
 மற்றையார் முற்றும் பித்தரே (9)

Pasuram 21 · corpus 667

Pasuram 21

Study resources at Uveda
அல்லி மா மலர் மங்கை நாதன் * அரங்கன் மெய்யடியார்கள் தம் *
 எல்லை இல் அடிமைத் திறத்தினில் * என்றும் மேவு மனத்தனாம் **
 கொல்லி காவலன் கூடல் நாயகன் * கோழிக்கோன் குலசேகரன் *
 சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர் * தொண்டர் தொண்டர்கள் ஆவரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.