Corpus pasurams 730–740

This page preserves the source-defined chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 84 · corpus 730

Pasuram 84

Study resources at Uveda
வன் தாளின் இணை வணங்கி வளநகரம் தொழுது ஏத்த * மன்னன் ஆவான்
 நின்றாயை * அரியணை மேல் இருந்தாயை * நெடுங் கானம் படரப் போகு
 என்றாள் ** எம் இராமாவோ * உனைப் பயந்த கைகேசி தன் சொல் கேட்டு *
 நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் * நன்மகனே உன்னை நானே (1)

Pasuram 85 · corpus 731

Pasuram 85

Study resources at Uveda
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு * இரு நிலத்தை வேண்டாதே, விரைந்து * வென்றி
 மைவாய களிறொழிந்து தேரொழிந்து * மாவொழிந்து வனமே மேவி **
 நெய்வாய வேல் நெடுங்கண் * நேரிழையும் இளங்கோவும் பின்பு போக *
 எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ * எம்பெருமான் என் செய்கேனே (2)

Pasuram 86 · corpus 732

Pasuram 86

Study resources at Uveda
கொல் அணை வேல் வரி நெடுங் கண் * கௌசலை தன் குல மதலாய் குனி வில் ஏந்தும் *
 மல் அணைந்த வரைத் தோளா * வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் **
 மெல் அணைமேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய் * வியன் கான மரத்தின் நீழல் *
 கல் அணைமேல் கண் துயிலக் கற்றனையோ? * காகுத்தா கரிய கோவே (3)

Pasuram 87 · corpus 733

Pasuram 87

Study resources at Uveda
வா போகு வா இன்னம் வந்து * ஒரு கால் கண்டு போ மலராள் கூந்தல் *
 வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா * விடையோன் தன் வில்லைச் செற்றாய் **
 மா போகு நெடுங் கானம் * வல்வினையேன் மனம் உருக்கும் மகனே * இன்று
 நீ போக என் நெஞ்சம் * இரு பிளவாய்ப் போகாதே நிற்குமாறே (4)

Pasuram 88 · corpus 734

Pasuram 88

Study resources at Uveda
பொருந்தார் கை வேல் நுதிபோல் பரல் பாய * மெல்லடிக்கள் குருதி சோர *
 விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப * வெம் பசிநோய் கூர ** இன்று
 பெரும் பாவியேன் மகனே போகின்றாய் * கேகயர் கோன் மகளாய்ப் பெற்ற *
 அரும் பாவி சொல் கேட்ட * அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே (5)

Pasuram 89 · corpus 735

Pasuram 89

Study resources at Uveda
அம்மா என்று உகந்து அழைக்கும் * ஆர்வச்சொல் கேளாதே அணி சேர் மார்வம் *
 என் மார்வத்திடை அழுந்தத் தழுவாதே * முழுசாதே மோவாது உச்சி **
 கைம்மாவின் நடை அன்ன மென்னடையும் * கமலம் போல் முகமும் காணாது *
 எம்மானை என் மகனை இழந்திட்ட * இழி தகையேன் இருக்கின்றேனே (6)

Pasuram 90 · corpus 736

Pasuram 90

Study resources at Uveda
பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து * பூந் துகில் சேர் அல்குல் *
 காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது * அங்கங்கள் அழகு மாறி **
 ஏமரு தோள் என் புதல்வன் * யான் இன்று செலத்தக்க வனம் தான் சேர்தல் *
 தூ மறையீர் இது தகவோ? * சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே (7)

Pasuram 91 · corpus 737

Pasuram 91

Study resources at Uveda
பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும் * தம்பியையும் பூவை போலும் *
 மின் பற்றா நுண்மருங்குல் மெல்லியல் என் * மருகியையும் வனத்தில் போக்கி **
 நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு * என்னையும் நீள் வானில் போக்க *
 என் பெற்றாய்? கைகேசீ * இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே (8)

Pasuram 92 · corpus 738

Pasuram 92

Study resources at Uveda
முன் ஒரு நாள் மழுவாளி சிலைவாங்கி * அவன் தவத்தை முற்றும் செற்றாய் *
 உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும் * ஒன்றாகக் கொள்ளாது **
 என்னையும் என் மெய் உரையும் மெய்யாகக் கொண்டு * வனம் புக்க எந்தாய் *
 நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் * ஏழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே! (9)

Pasuram 93 · corpus 739

Pasuram 93

Study resources at Uveda
தேன் நகு மா மலர்க் கூந்தல் * கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ *
 கூன் உருவின் கொடுந்தொழுத்தை சொல் கேட்ட * கொடியவள்தன் சொற்கொண்டு ** இன்று
 கானகமே மிக விரும்பி * நீ துறந்த வள நகரைத் துறந்து * நானும்
 வானகமே மிக விரும்பிப் போகின்றேன் * மனு குலத்தார் தங்கள் கோவே (10)

Pasuram 94 · corpus 740

Pasuram 94

Study resources at Uveda
ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய் * வனம் புக்க அதனுக்கு ஆற்றா *
 தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான் புலம்பிய * அப்புலம்பல் தன்னை **
 கூர் ஆர்ந்த வேல் வலவன் * கோழியர் கோன் குடைக் குல சேகரன் சொல் செய்த *
 சீர் ஆர்ந்த தமிழ் மாலை இவை வல்லார் * தீ நெறிக்கண் செல்லார் தாமே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.