Pasuram 73 · corpus 719
Pasuram 73
மன்னு புகழ்க் கௌசலை தன் * மணி வயிறு வாய்த்தவனே *
தென் இலங்கைக் கோன் முடிகள் * சிந்துவித்தாய் செம்பொன் சேர் **
கன்னி நன் மா மதில் புடைசூழ் * கணபுரத்து என் கருமணியே *
என்னுடைய இன்னமுதே * இராகவனே தாலேலோ (1)
Kulasekara Azhwar · Pasurams 73–83
Corpus pasurams 719–729
This page preserves the source-defined chapter 8 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 73 · corpus 719
மன்னு புகழ்க் கௌசலை தன் * மணி வயிறு வாய்த்தவனே *
தென் இலங்கைக் கோன் முடிகள் * சிந்துவித்தாய் செம்பொன் சேர் **
கன்னி நன் மா மதில் புடைசூழ் * கணபுரத்து என் கருமணியே *
என்னுடைய இன்னமுதே * இராகவனே தாலேலோ (1)
Pasuram 74 · corpus 720
புண்டரிக மலர் தன் மேல் * புவனி எல்லாம் படைத்தவனே *
திண் திறலாள் தாடகைதன் * உரம் உருவச் சிலை வளைத்தாய் **
கண்டவர் தம் மனம் வழங்கும் * கணபுரத்து என் கருமணியே *
எண் திசையும் ஆளுடையாய் * இராகவனே தாலேலோ (2)
Pasuram 75 · corpus 721
கொங்கு மலி கருங்குழலாள் * கௌசலை தன் குல மதலாய் *
தங்கு பெரும் புகழ்ச்சனகன் * திரு மருகா தாசரதீ **
கங்கையிலும் தீர்த்த மலி * கணபுரத்து என் கருமணியே
எங்கள் குலத்து இன்னமுதே * இராகவனே தாலேலோ (3)
Pasuram 76 · corpus 722
தாமரை மேல் அயனவனைப் * படைத்தவனே தயரதன் தன் *
மா மதலாய் * மைதிலிதன் மணவாளா ** வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் * கணபுரத்து என் கருமணியே *
ஏமருவும் சிலை வலவா * இராகவனே தாலேலோ (4)
Pasuram 77 · corpus 723
பார் ஆளும் படர் செல்வம் * பரத நம்பிக்கே அருளி *
ஆரா அன்பு இளையவனோடு * அருங்கானம் அடைந்தவனே **
சீர் ஆளும் வரை மார்பா * திருக் கண்ணபுரத்து அரசே *
தார் ஆரும் நீண் முடி * என் தாசரதீ தாலேலோ (5)
Pasuram 78 · corpus 724
சுற்றம் எல்லாம் பின் தொடரத் * தொல் கானம் அடைந்தவனே *
அற்றவர்கட்கு அருமருந்தே * அயோத்தி நகர்க்கு அதிபதியே **
கற்றவர்கள் தாம் வாழும் * கணபுரத்து என் கருமணியே *
சிற்றவை தன் சொல் கொண்ட * சீராமா தாலேலோ (6)
Pasuram 79 · corpus 725
ஆலின் இலைப் பாலகனாய் * அன்று உலகம் உண்டவனே *
வாலியைக் கொன்று அரசு * இளைய வானரத்துக்கு அளித்தவனே **
காலின் மணி கரை அலைக்கும் * கணபுரத்து என் கருமணியே *
ஆலி நகர்க்கு அதிபதியே * அயோத்திமனே தாலேலோ (7)
Pasuram 80 · corpus 726
மலை அதனால் அணை கட்டி * மதிள் இலங்கை அழித்தவனே *
அலை கடலைக் கடைந்து * அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே **
கலை வலவர் தாம் வாழும் * கணபுரத்து என் கருமணியே *
சிலை வலவா சேவகனே * சீராமா தாலேலோ (8)
Pasuram 81 · corpus 727
தளை அவிழும் நறுங் குஞ்சித் * தயரதன் தன் குல மதலாய் *
வளைய ஒரு சிலை அதனால் * மதிள் இலங்கை அழித்தவனே **
களை கழுநீர் மருங்கு அலரும் * கணபுரத்து என் கருமணியே *
இளையவர்கட்கு அருள் உடையாய் * இராகவனே தாலேலோ (9)
Pasuram 82 · corpus 728
தேவரையும் அசுரரையும் * திசைகளையும் படைத்தவனே *
யாவரும் வந்து அடி வணங்க * அரங்க நகர்த் துயின்றவனே **
காவிரி நல் நதி பாயும் * கணபுரத்து என் கருமணியே *
ஏ வரி வெஞ்சிலை வலவா * இராகவனே தாலேலோ (10)
Pasuram 83 · corpus 729
கன்னி நன் மா மதில் புடை சூழ் * கணபுரத்து என் காகுத்தன்
தன் அடிமேல் * தாலேலோ என்று உரைத்த * தமிழ் மாலை **
கொல் நவிலும் வேல் வலவன் * குடைக் குலசேகரன் சொன்ன *
பன்னிய நூல் பத்தும் வல்லார் * பாங்காய பத்தர்களே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.