Corpus pasurams 3893–3902

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1 · corpus 3893

Pasuram 1

Study resources at Uveda
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் * புகழ் மலிந்த
 பா மன்னு மாறன் * அடி பணிந்து உய்ந்தவன் ** பல் கலையோர்
 தாம் மன்ன வந்த இராமாநுசன் * சரணாரவிந்தம்
 நாம் மன்னி வாழ * நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே (1)

Pasuram 2 · corpus 3894

Pasuram 2

Study resources at Uveda
கள் ஆர் பொழில் தென் அரங்கன் * கமலப் பதங்கள் நெஞ்சில்
 கொள்ளா * மனிசரை நீங்கி ** குறையல் பிரான் அடிக்கீழ்
 விள்ளாத அன்பன் இராமாநுசன் * மிக்க சீலம் அல்லால்
 உள்ளாது என் நெஞ்சு * ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே (2)

Pasuram 3 · corpus 3895

Pasuram 3

Study resources at Uveda
பேர் இயல் நெஞ்சே * அடி பணிந்தேன் உன்னை * பேய்ப் பிறவிப்
 பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி ** பொருவு அரும் சீர்
 ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும் *
 சீரிய பேறு உடையார் * அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே (3)

Pasuram 4 · corpus 3896

Pasuram 4

Study resources at Uveda
என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி * மருள் சுரந்த
 முன்னைப் பழவினை வேர் அறுத்து ** ஊழி முதல்வனையே
 பன்னப் பணித்த இராமாநுசன் * பரன் பாதமும் என்
 சென்னித் தரிக்க வைத்தான் * எனக்கு ஏதும் சிதைவு இல்லையே (4)

Pasuram 5 · corpus 3897

Pasuram 5

Study resources at Uveda
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று * இசையகில்லா
 மனக் குற்ற மாந்தர் * பழிக்கில் புகழ் ** அவன் மன்னிய சீர்
 தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா *
 இனக் குற்றம் காணகில்லார் * பத்தி ஏய்ந்த இயல் இது என்றே (5)

Pasuram 6 · corpus 3898

Pasuram 6

Study resources at Uveda
இயலும் பொருளும் இசையத் தொடுத்து * ஈன் கவிகள் அன்பால்
 மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை ** மதி இன்மையால்
 பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால் *
 முயல்கின்றனன் * அவன் தன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே (6)

Pasuram 7 · corpus 3899

Pasuram 7

Study resources at Uveda
மொழியைக் கடக்கும் பெரும் புகழான் * வஞ்ச முக்குறும்பு ஆம்
 குழியைக் கடக்கும் * நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் **
 பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி * அல்லா
 வழியைக் கடத்தல் * எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே (7)

Pasuram 8 · corpus 3900

Pasuram 8

Study resources at Uveda
வருத்தும் புற இருள் மாற்ற * எம் பொய்கைப் பிரான் மறையின்
 குருத்தின் பொருளையும் * செந்தமிழ் தன்னையும் கூட்டி ** ஒன்றத்
 திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுளத்தே *
 இருத்தும் பரமன் * இராமாநுசன் எம் இறையவனே (8)

Pasuram 9 · corpus 3901

Pasuram 9

Study resources at Uveda
இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட * ஞானம் என்னும்
 நிறை விளக்கு ஏற்றிய * பூதத் திருவடி தாள்கள் ** நெஞ்சத்து
 உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர் *
 மறையினைக் காத்து * இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே (9)

Pasuram 10 · corpus 3902

Pasuram 10

Study resources at Uveda
மன்னிய பேர் இருள் மாண்டபின் * கோவலுள் மா மலராள்
 தன்னொடும் ஆயனைக் * கண்டமை காட்டும் ** தமிழ்த் தலைவன்
 பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் *
 சென்னியில் சூடும் * திருவுடையார் என்றும் சீரியரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.