Pasuram 11 · corpus 3903
Pasuram 11
சீரிய நான்மறைச் செம்பொருள் * செந்தமிழால் அளித்த
பார் இயலும் புகழப் * பாண்பெருமாள் ** சரண் ஆம் பதுமத்
தார் இயல் சென்னி இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர் தம் *
கார் இய வண்மை * என்னால் சொல்லொணாது இக் கடல் இடத்தே (11)
Thiruvarangathu Amudanar · Reading part · pasurams 11–20
Corpus pasurams 3903–3912
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 11 · corpus 3903
சீரிய நான்மறைச் செம்பொருள் * செந்தமிழால் அளித்த
பார் இயலும் புகழப் * பாண்பெருமாள் ** சரண் ஆம் பதுமத்
தார் இயல் சென்னி இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர் தம் *
கார் இய வண்மை * என்னால் சொல்லொணாது இக் கடல் இடத்தே (11)
Pasuram 12 · corpus 3904
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் * இணை அடிப்போது
அடங்கும் இதயத்து இராமாநுசன் ** அம் பொன் பாதம் என்றும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத் *
திடம் கொண்ட ஞானியர்க்கே * அடியேன் அன்பு செய்வதுவே (12)
Pasuram 13 · corpus 3905
செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் * செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் ** பேராத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி * ஆதரியா
மெய்யன் * இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே (13)
Pasuram 14 · corpus 3906
கதிக்குப் பதறி * வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்கத் * தவம் செய்யும் கொள்கை அற்றேன் ** கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே *
துதிக்கும் பரமன் * இராமாநுசன் என்னைச் சோர்விலனே (14)
Pasuram 15 · corpus 3907
சோராத காதல் பெருஞ் சுழிப்பால் * தொல்லை மாலை ஒன்றும்
பாராது அவனைப் * பல்லாண்டு என்று காப்பிடும் * பான்மையன் தாள்
பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர் *
சாரா மனிசரைச் சேரேன் * எனக்கு என்ன தாழ்வு இனியே? (15)
Pasuram 16 · corpus 3908
தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து * தலம் முழுதும் கலியே
ஆள்கின்ற நாள் வந்து * அளித்தவன் காண்மின் ** அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் *
வாழ்கின்ற வள்ளல் * இராமாநுசன் என்னும் மா முனியே (16)
Pasuram 17 · corpus 3909
முனியார் துயரங்கள் முந்திலும் * இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் * கண்ணமங்கை நின்றானை ** கலை பரவும்
தனி ஆனையைத் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு * உலகில்
இனியானை * எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே (17)
Pasuram 18 · corpus 3910
எய்தற்கு அரிய மறைகளை * ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் * சடகோபனை ** சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் *
உய்தற்கு உதவும் * இராமாநுசன் எம் உறுதுணையே (18)
Pasuram 19 · corpus 3911
உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் * உயர் குருவும்
வெறி தரு பூமகள் நாதனும் ** மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர் *
அறிதர நின்ற * இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே (19)
Pasuram 20 · corpus 3912
ஆரப் பொழில் தென் குருகைப்பிரான் * அமுதத் திருவாய்
ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு ** இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை * நெஞ்சால்
வாரிப் பருகும் * இராமாநுசன் என் தன் மா நிதியே (20)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.