Corpus pasurams 3993–4000

This neutral reading part groups 8 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 101 · corpus 3993

Pasuram 101

Study resources at Uveda
மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு * மதி மயங்கித்
 துயக்கும் பிறவியில் * தோன்றிய என்னை ** துயர் அகற்றி
 உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி *
 நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் * நல்லவர் என்றும் நைந்தே (101)

Pasuram 102 · corpus 3994

Pasuram 102

Study resources at Uveda
நையும் மனம் உன் குணங்களை உன்னி * என் நாவிருந்து எம்
 ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் ** அருவினையேன்
 கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ் *
 வையம் இதனில் * உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே? (102)

Pasuram 103 · corpus 3995

Pasuram 103

Study resources at Uveda
வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்று ஆய் * அன்று வாள் அவுணன்
 கிளர்ந்த * பொன் ஆகம் கிழித்தவன் ** கீர்த்திப் பயிர் எழுந்து
 விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என் தன் மெய்வினை நோய் *
 களைந்து நல் ஞானம் அளித்தனன் * கையில் கனி என்னவே (103)

Pasuram 104 · corpus 3996

Pasuram 104

Study resources at Uveda
கையில் கனி என்னக் * கண்ணனைக் காட்டித் தரிலும் * உன் தன்
 மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் ** நிரயத்
 தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் அருள் நீ *
 செய்யில் தரிப்பன் * இராமாநுச என் செழுங் கொண்டலே (104)

Pasuram 105 · corpus 3997

Pasuram 105

Study resources at Uveda
செழுந்திரைப் பாற்கடல் கண் துயில் மாயன் * திருவடிக்கீழ்
 விழுந்திருப்பார் நெஞ்சில் * மேவு நல் ஞானி ** நல் வேதியர்கள்
 தொழும் திருப் பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர் *
 எழுந்து இரைத்து ஆடும் இடம் * அடியேனுக்கு இருப்பிடமே (105)

Pasuram 106 · corpus 3998

Pasuram 106

Study resources at Uveda
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் * மாலிருஞ்சோலை என்னும்
 பொருப்பிடம் * மாயனுக்கு என்பர் நல்லோர் ** அவை தம்மொடும் வந்து
 இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து * இன்று அவன் வந்து
 இருப்பிடம் * என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே (106)

Pasuram 107 · corpus 3999

Pasuram 107

Study resources at Uveda
இன்பு உற்ற சீலத்து இராமாநுச * என்றும் எவ்விடத்தும்
 என்பு உற்ற நோய் * உடல்தோறும் பிறந்து இறந்து ** எண் அரிய
 துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு * உன் தொண்டர்கட்கே
 அன்பு உற்று இருக்கும்படி * என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே (107)

Pasuram 108 · corpus 4000

Pasuram 108

Study resources at Uveda
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் * அணி ஆகம் மன்னும்
பங்கய மா மலர்ப் * பாவையைப் போற்றுதும் ** பத்தி எல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நம் தலைமிசையே *
பொங்கிய கீர்த்தி * இராமாநுசன் அடிப் பூ மன்னவே (108)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.