Corpus pasurams 3983–3992

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 91 · corpus 3983

Pasuram 91

Study resources at Uveda
மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் * அவப் பொருள் ஆம்
 இருள் சுரந்து எய்த்த * உலகு இருள் நீங்க ** தன் ஈண்டிய சீர்
 அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் * அரங்கன் என்னும்
 பொருள் சுரந்தான் * எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே (91)

Pasuram 92 · corpus 3984

Pasuram 92

Study resources at Uveda
புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் * அடி போற்றி செய்யும்
 நுண் அரும் கேள்வி * நுவன்றும் இலேன் ** செம்மை நூல் புலவர்க்கு
 எண் அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து * என்
 கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் * நின்ற இக் காரணம் கட்டுரையே (92)

Pasuram 93 · corpus 3985

Pasuram 93

Study resources at Uveda
கட்டப் பொருளை மறைப் பொருள் என்று * கயவர் சொல்லும்
 பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே ** என் பெரு வினையைக்
 கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி *
 வெட்டிக் களைந்த * இராமாநுசன் என்னும் மெய்த்தவனே? (93)

Pasuram 94 · corpus 3986

Pasuram 94

Study resources at Uveda
தவம் தரும் செல்வம் தகவும் தரும் * சலியாப் பிறவிப்
 பவம் தரும் * தீவினை பாற்றித் தரும் ** பரந் தாமம் என்னும்
 திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு
 உவந்து அருந்தேன் * அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே (94)

Pasuram 95 · corpus 3987

Pasuram 95

Study resources at Uveda
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து * அவர்க்கு உயவே
 பண்ணும் பரனும் பரிவிலன் ஆம்படி ** பல் உயிர்க்கும்
 விண்ணின்தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன் *
 மண்ணின் தலத்து உதித்து * உய்மறை நாலும் வளர்த்தனனே (95)

Pasuram 96 · corpus 3988

Pasuram 96

Study resources at Uveda
வளரும் பிணிகொண்ட வல்வினையால் * மிக்க நல்வினையில்
 கிளரும் துணிவு கிடைத்தறியாது ** முடைத்தலை ஊன்
 தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு *
 உளர் எம் இறைவர் * இராமாநுசன் தன்னை உற்றவரே (96)

Pasuram 97 · corpus 3989

Pasuram 97

Study resources at Uveda
தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் * மன்னு தாமரைத் தாள்
 தன்னை உற்று ஆட்செய்ய * என்னை உற்றான் இன்று ** தன் தகவால்
 தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து *
 தன்னை உற்றாரை * இராமாநுசன் குணம் சாற்றிடுமே (97)

Pasuram 98 · corpus 3990

Pasuram 98

Study resources at Uveda
இடுமே இனிய சுவர்க்கத்தில்? * இன்னும் நரகில் இட்டுச்
 சுடுமே? அவற்றைத் * தொடர் தரு தொல்லை ** சுழல் பிறப்பில்
 நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே *
 விடுமே? சரணம் என்றால் * மனமே நையல் மேவுதற்கே (98)

Pasuram 99 · corpus 3991

Pasuram 99

Study resources at Uveda
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் * தாழ்சடையோன்
 சொல் கற்ற சோம்பரும் * சூனியவாதரும் ** நான்மறையும்
 நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் * நீள் நிலத்தே
 பொன் கற்பகம் * எம் இராமாநுச முனி போந்த பின்னே (99)

Pasuram 100 · corpus 3992

Pasuram 100

Study resources at Uveda
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு * உனது அடிப்போதில்
 ஒண் சீர் ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி ** நின்பால் அதுவே
 ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும் *
 மாந்தகில்லாது * இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே (100)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.