Pasuram 1 · corpus 2673
Pasuram 1
கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை *
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்று *
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல் *
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் * இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே * 1
Thirumangai Azhwar · Reading part · pasurams 1–10
Corpus pasurams 2673–2682
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 1 · corpus 2673
கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை *
சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்று *
பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல் *
நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் * இப்
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே * 1
Pasuram 2 · corpus 2674
அம் மூன்றும்
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று *
ஆர் ஆர் இவற்றினிடை அதனை எய்துவார் *
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் * 2
Pasuram 3 · corpus 2675
சிக்கென மற்று
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும் *
ஓராமை அன்றே? உலகத்தார் சொல்லும் சொல் *
ஓராமை ஆம் ஆறு அது உரைக்கேன் கேளாமே *
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி *
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு *
ஆரா அமுதம் அங்கு எய்தி * 3
Pasuram 4 · corpus 2676
அதில் நின்றும்
வாராது ஒழிவது ஒன்று உண்டே? * அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே? *
ஏர் ஆர் இளமுலையீர் என் தனக்கு உற்றது தான் * 4
Pasuram 5 · corpus 2677
கார் ஆர் குழல் எடுத்துக் கட்டி * கதிர் முலையை
வார் ஆர வீக்கி மணி மேகலை திருத்தி *
ஆர் ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து *
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான் *
நீர் ஆர் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன் *
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க *
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி * 5
Pasuram 6 · corpus 2678
செழுந் தெருவே
ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு *
ஏர் ஆர் இளமுலையார் என்னையரும் எல்லாரும் *
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல்வினையால் *
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் *
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் * 6
Pasuram 7 · corpus 2679
அறிவு அழிந்து
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி *
ஏர் ஆர் கிளிக் கிளவி எம் அனை தான் வந்து என்னைச் *
சீர் ஆர் செழும் புழுதிக் காப்பிட்டு * 7
Pasuram 8 · corpus 2680
செங் குறிஞ்சித்
தார் ஆர் நறு மாலைச் சாத்தற்கு * தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் * 8
Pasuram 9 · corpus 2681
அதனாலும்
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு *
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே *
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் *
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல் *
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் * 9
Pasuram 10 · corpus 2682
அது கேட்டுக்
கார் ஆர் குழல் கொண்டைக் கட்டுவிச்சி கட்டேறி *
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா *
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா *
பேர் ஆயிரம் உடையான் என்றாள் * 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.