Corpus pasurams 2683–2692

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 11 · corpus 2683

Pasuram 11

Study resources at Uveda
பேர்த்தேயும்
 கார் ஆர் திருமேனி காட்டினாள் * கையதுவும்
 சீர் ஆர் வலம்புரியே என்றாள் * 11

Pasuram 12 · corpus 2684

Pasuram 12

Study resources at Uveda
திருத் துழாயத்
 தார் ஆர் நறு மாலை கட்டுரைத்தாள் கட்டுரையா *
 நீர் ஏதும் அஞ்சேல்மின் நும் மகளை நோய் செய்தான் *
 ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் *
 கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறியக் கூறுகேனோ? *
 ஆரால் இவ் வையம் அடி அளப்புண்டது தான் *
 ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது * மற்று
 ஆராலே கல் மாரி காத்தது தான்? * 12

Pasuram 13 · corpus 2685

Pasuram 13

Study resources at Uveda
ஆழி நீர்
 ஆரால் கடைந்திடப்பட்டது? * அவன் காண்மின்
 ஊர் ஆ நிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் *
 ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி *
 சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செந்துவர் வாய் *
 வார் ஆர் வனமுலையாள் மத்து ஆரப் பற்றிக்கொண்டு *
 ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய் *
 சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை *
 வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு *
 நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை *
 போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம் *
 ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று *
 தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கை நீட்டி *
 ஆராத வெண்ணெய் விழுங்கி * 13

Pasuram 14 · corpus 2686

Pasuram 14

Study resources at Uveda
அருகு இருந்த
 மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே *
 ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டு அவளும் *
 வாராத் தான் வைத்தது காணாள் * 14

Pasuram 15 · corpus 2687

Pasuram 15

Study resources at Uveda
வயிறு அடித்து இங்கு
 ஆர் ஆர் புகுதுவார்? ஐயர் இவர் அல்லால் *
 நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடுங் கயிற்றால் *
 ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே *
 தீரா வெகுளியள் ஆய்ச் சிக்கென ஆர்த்து அடிப்ப *
 ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் * 15

Pasuram 16 · corpus 2688

Pasuram 16

Study resources at Uveda
அன்றியும்
 நீர் ஆர் நெடுங் கயத்தைச் சென்று அலைக்க நின்று உரப்பி *
 ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை *
 வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து *
 சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் * 16

Pasuram 17 · corpus 2689

Pasuram 17

Study resources at Uveda
தன் சீதைக்கு
 நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை *
 கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும் *
 ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை * 17

Pasuram 18 · corpus 2690

Pasuram 18

Study resources at Uveda
வெம் நரகம்
 சேரா வகையே சிலை குனித்தான் * செந்துவர் வாய்
 வார் ஆர் வனமுலையாள் வைதேவி காரணமா *
 ஏர் ஆர் தடந் தோள் இராவணனை * 18

Pasuram 19 · corpus 2691

Pasuram 19

Study resources at Uveda
ஈர் ஐந்து
 சீர் ஆர் சிரம் அறுத்துச் செற்று உகந்த செங்கண் மால் *
 போர் ஆர் நெடு வேலோன் பொன்பெயரோன் ஆகத்தை *
 கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு * 19

Pasuram 20 · corpus 2692

Pasuram 20

Study resources at Uveda
குடல் மாலை
 சீர் ஆர் திரு மார்பின்மேல் கட்டி * செங் குருதி
 சோராக் கிடந்தானைக் குங்குமத் தோள் கொட்டி *
 ஆரா எழுந்தான் அரி உருவாய் * 20

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.