Pasuram 31 · corpus 2703
Pasuram 31
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார் *
ஆரே பொல்லாமை அறிவார்? * அது நிற்க 31
Thirumangai Azhwar · Reading part · pasurams 31–40
Corpus pasurams 2703–2712
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 31 · corpus 2703
கார் ஆர் கடல் போலும் காமத்தர் ஆயினார் *
ஆரே பொல்லாமை அறிவார்? * அது நிற்க 31
Pasuram 32 · corpus 2704
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர் *
வார் ஆர் வனமுலை வாசவதத்தை என்று *
ஆரானும் சொல்லப்படுவாள் * அவளும் தன் 32
Pasuram 33 · corpus 2705
பேர் ஆயம் எல்லாம் ஒழியப் பெருந் தெருவே *
தார் ஆர் தடந்தோள் தளைக் காலன் பின் போனாள் *
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே? * மற்று எனக்கு இங்கு
ஆரானும் கற்பிப்பார் நாயகரே? * நான் அவனைக் 33
Pasuram 34 · corpus 2706
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே * மதிள் கச்சி
ஊரகமே பேரகமே *
பேரா மருது இறுத்தான் வெள்றையே வெஃகாவே *
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் *
ஆராமம் சூழ்ந்த அரங்கம் * கணமங்கை 34
Pasuram 35 · corpus 2707
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம் *
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர் *
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை *
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை *
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் * 35
Pasuram 36 · corpus 2708
பாரோர் புகழும் வதரி வடமதுரை * 36
Pasuram 37 · corpus 2709
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை *
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை * செங்கண் நெடியானை தேன் துழாய்த்
தாரானை * தாமரை போல் கண்ணானை 37
Pasuram 38 · corpus 2710
எண் அருஞ் சீர் பேர் ஆயிரமும் பிதற்றி * பெருந் தெருவே 38
Pasuram 39 · corpus 2711
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் * 39
Pasuram 40 · corpus 2712
வார் ஆர் பூம் பெண்ணை மடல் 40
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.