Corpus pasurams 2693–2702

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 21 · corpus 2693

Pasuram 21

Study resources at Uveda
அன்றியும்
 பேர் வாமன் ஆகிய காலத்து * மூவடி மண்
 தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால் *
 நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை * 21

Pasuram 22 · corpus 2694

Pasuram 22

Study resources at Uveda
ஆராத போரில் அசுரர்களும் தானுமாய் *
 கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக *
 பேராமல் தாங்கிக் கடைந்தான் * 22

Pasuram 23 · corpus 2695

Pasuram 23

Study resources at Uveda
திருத் துழாய்த்
 தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும் *
 போர் ஆனை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்று அலறி *
 நீர் ஆர் மலர்க் கமலம் கொண்டு ஓர் நெடுங் கையால் *
 நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய்! *
 வாராய் என் ஆர் இடரை நீக்காய் * என வெகுண்டு
 தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக *
 ஈரா அதனை இடர் கடிந்தான் எம் பெருமான் *
 பேர் ஆயிரம் உடையான் பேய்ப் பெண்டீர் நும் மகளை *
 தீரா நோய் செய்தான் என உரைத்தாள் * சிக்கென மற்று 23

Pasuram 24 · corpus 2696

Pasuram 24

Study resources at Uveda
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும் *
 போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூந் துழாய் *
 தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே * மற்று
 ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் * 24

Pasuram 25 · corpus 2697

Pasuram 25

Study resources at Uveda
நான் அவனைக்
 கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா *
 பேரா பிதற்றா திரிதருவன் * பின்னையும் 25

Pasuram 26 · corpus 2698

Pasuram 26

Study resources at Uveda
ஈராப் புகுதலும் இவ் உடலைத் தண் வாடை *
 சோரா மறுக்கும் வகை அறியேன் * சூழ் குழலார் 26

Pasuram 27 · corpus 2699

Pasuram 27

Study resources at Uveda
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை *
 வாராமல் காப்பதற்கு வாளா இருந்தொழிந்தேன் *
 வாராய் மட நெஞ்சே வந்து * மணிவண்ணன் 27

Pasuram 28 · corpus 2700

Pasuram 28

Study resources at Uveda
சீர் ஆர் திருத் துழாய் மாலை நமக்கு அருளி *
 தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை *
 ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால் *
 ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும் *
 போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு *
 கார் ஆர் கடல் வண்ணன் பின் போன நெஞ்சமும் *
 வாராதே என்னை மறந்தது தான் * 28 வல்வினையேன்

Pasuram 29 · corpus 2701

Pasuram 29

Study resources at Uveda
ஊரார் உகப்பதே ஆயினேன் * மற்று எனக்கு இங்கு
 ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல் *
 நீராய் உருகும் என் ஆவி * நெடுங் கண்கள் 29

Pasuram 30 · corpus 2702

Pasuram 30

Study resources at Uveda
ஊரார் உறங்கிலும் தான் உறங்கா * உத்தமன் தன்
 பேர் ஆயினவே பிதற்றுவன் * பின்னையும் 30

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.