Corpus pasurams 752–761

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1 · corpus 752

Pasuram 1

Study resources at Uveda
பூ நிலாய ஐந்துமாய்ப் * புனற்கண் நின்ற நான்குமாய் *
 தீ நிலாய மூன்றுமாய்ச் * சிறந்த கால் இரண்டுமாய் **
 மீ நிலாயது ஒன்றும் ஆகி * வேறு வேறு தன்மையாய் *
 நீ நிலாய வண்ணம் நின்னை * யார் நினைக்க வல்லரே? (1)

Pasuram 2 · corpus 753

Pasuram 2

Study resources at Uveda
ஆறும் ஆறும் ஆறுமாய் * ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் *
 ஏறு சீர் இரண்டும் மூன்றும் * ஏழும் ஆறும் எட்டுமாய் **
 வேறு வேறு ஞானம் ஆகி * மெய்யினோடு பொய்யுமாய் *
 ஊறோடு ஓசையாய ஐந்தும் * ஆய ஆய மாயனே (2)

Pasuram 3 · corpus 754

Pasuram 3

Study resources at Uveda
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி * அல்லவற்று உளாயுமாய் *
 ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி * நின்ற ஆதி தேவனே **
 ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி * அந்தரத்து அணைந்து நின்று *
 ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை * யாவர் காண வல்லரே? (3)

Pasuram 4 · corpus 755

Pasuram 4

Study resources at Uveda
மூன்று முப்பது ஆறினோடு * ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் *
 மூன்று மூர்த்தி ஆகி மூன்று * மூன்று மூன்று மூன்றுமாய் **
 தோன்று சோதி மூன்றுமாய் * துளக்கம் இல் விளக்கமாய் *
 ஏன்று என் ஆவியுள் புகுந்தது * என் கொலோ? எம் ஈசனே (4)

Pasuram 5 · corpus 756

Pasuram 5

Study resources at Uveda
நின்று இயங்கும் ஒன்று அலா * உருக்கள் தோறும் ஆவியாய் *
 ஒன்றி உள் கலந்து நின்ற * நின்ன தன்மை இன்னது என்று **
 என்றும் யார்க்கும் எண் இறந்த * ஆதியாய் நின் உந்திவாய் *
 அன்று நான்முகன் பயந்த * ஆதிதேவன் அல்லையே? (5)

Pasuram 6 · corpus 757

Pasuram 6

Study resources at Uveda
நாகம் ஏந்து மேரு வெற்பை * நாகம் ஏந்து மண்ணினை *
 நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் * ஏந்து வார்புனல் **
 மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் * வாயு ஐந்து அமைந்து காத்து *
 ஏகம் ஏந்தி நின்ற நீர்மை * நின்கணே இயன்றதே (6)

Pasuram 7 · corpus 758

Pasuram 7

Study resources at Uveda
ஒன்று இரண்டு மூர்த்தியாய் * உறக்கமோடு உணர்ச்சியாய் *
 ஒன்று இரண்டு காலம் ஆகி * வேலை ஞாலம் ஆயினாய் **
 ஒன்று இரண்டு தீயும் ஆகி * ஆயன் ஆய மாயனே *
 ஒன்று இரண்டு கண்ணினானும் * உன்னை ஏத்த வல்லனே? (7)

Pasuram 8 · corpus 759

Pasuram 8

Study resources at Uveda
ஆதி ஆன வானவர்க்கும் * அண்டம் ஆய அப்புறத்து
 ஆதி ஆன வானவர்க்கும் * ஆதி ஆன ஆதி நீ **
 ஆதி ஆன வான வாணர் * அந்த காலம் நீ உரைத்தி
 ஆதி ஆன காலம் நின்னை * யாவர் காண வல்லரே (8)

Pasuram 9 · corpus 760

Pasuram 9

Study resources at Uveda
தாது உலாவு கொன்றை மாலை * துன்னு செஞ்சடைச் சிவன் *
 நீதியால் வணங்கு பாத * நின்மலா நிலாய சீர் **
 வேத வாணர் கீத வேள்வி * நீதியான கேள்வியார் *
 நீதியால் வணங்குகின்ற * நீர்மை நின்கண் நின்றதே (9)

Pasuram 10 · corpus 761

Pasuram 10

Study resources at Uveda
தன்னுளே திரைத்து எழும் * தரங்க வெண் தடங்கடல் *
 தன்னுளே திரைத்து எழுந்து * அடங்குகின்ற தன்மை போல் **
 நின்னுளே பிறந்து இறந்து * நிற்பவும் திரிபவும் *
 நின்னுளே அடங்குகின்ற * நீர்மை நின்கண் நின்றதே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.