Pasuram 11 · corpus 762
Pasuram 11
சொல்லினால் தொடர்ச்சி நீ * சொலப்படும் பொருளும் நீ *
சொல்லினால் சொலப்படாது * தோன்றுகின்ற சோதி நீ **
சொல்லினால் படைக்க * நீ படைக்க வந்து தோன்றினார் *
சொல்லினால் சுருங்க * நின் குணங்கள் சொல்ல வல்லரே? (11)
Thirumazhisai Azhwar · Reading part · pasurams 11–20
Corpus pasurams 762–771
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 11 · corpus 762
சொல்லினால் தொடர்ச்சி நீ * சொலப்படும் பொருளும் நீ *
சொல்லினால் சொலப்படாது * தோன்றுகின்ற சோதி நீ **
சொல்லினால் படைக்க * நீ படைக்க வந்து தோன்றினார் *
சொல்லினால் சுருங்க * நின் குணங்கள் சொல்ல வல்லரே? (11)
Pasuram 12 · corpus 763
உலகு தன்னை நீ படைத்தி * உள் ஒடுக்கி வைத்தி மீண்டு *
உலகு தன்னுளே பிறத்தி * ஓரிடத்தை அல்லையால் **
உலகு நின்னொடு ஒன்றி நிற்க * வேறு நிற்றி ஆதலால் *
உலகில் நின்னை உள்ள சூழல் * யாவர் உள்ள வல்லரே? (12)
Pasuram 13 · corpus 764
இன்னை என்று சொல்லல் ஆவது * இல்லை யாதும் இட்டிடை *
பின்னை கேள்வன் என்பர் * உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் **
பின்னை ஆய கோலமோடு * பேரும் ஊரும் ஆதியும் *
நின்னை யார் நினைக்க வல்லர் * நீர்மையால் நினைக்கிலே? (13)
Pasuram 14 · corpus 765
தூய்மை யோகம் ஆயினாய் * துழாய் அலங்கல் மாலையாய் *
ஆமை ஆகி ஆழ்கடல் துயின்ற * ஆதிதேவ ** நின்
நாமதேயம் இன்னது என்ன * வல்லம் அல்ல ஆகிலும் *
சாம வேத கீதனாய * சக்ரபாணி அல்லையே? (14)
Pasuram 15 · corpus 766
அங்கம் ஆறும் வேதம் நான்கும் * ஆகி நின்று அவற்றுளே *
தங்குகின்ற தன்மையாய் * தடங்கடல் பணத்தலை **
செங்கண் நாகணைக் கிடந்த * செல்வம் மல்கு சீரினாய் *
சங்க வண்ணம் அன்ன மேனி * சார்ங்கபாணி அல்லையே? (15)
Pasuram 16 · corpus 767
தலைக் கணம் துகள் குழம்பு * சாதி சோதி தோற்றமாய் *
நிலைக் கணங்கள் காண வந்து * நிற்றியேலும் நீடு இரும் **
கலைக் கணங்கள் சொற் பொருள் * கருத்தினால் நினைக்கொணா *
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் * மாட்சி நின்தன் மாட்சியே (16)
Pasuram 17 · corpus 768
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி * நாலு மூர்த்தி நன்மை சேர் *
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி * எண் இல் மூர்த்தியாய் **
நாக மூர்த்தி சயனமாய் * நலங் கடல் கிடந்து மேல் *
ஆக மூர்த்தி ஆய வண்ணம் * என் கொல்? ஆதிதேவனே (17)
Pasuram 18 · corpus 769
விடத்த வாய் ஒர் ஆயிரம் * இராயிரம் கண் வெந்தழல் *
விடுத்து வீழ்வு இலாத போகம் * மிக்க சோதி தொக்க சீர் **
தொடுத்து மேல் விதானமாய * பௌவ நீர் அராவணை *
படுத்த பாயல் பள்ளி கொள்வது * என்கொல் வேலை வண்ணனே (18)
Pasuram 19 · corpus 770
புள்ளது ஆகி வேதம் நான்கும் * ஓதினாய் அது அன்றியும் *
புள்ளின் வாய் பிளந்து * புட் கொடிப் பிடித்த பின்னரும் **
புள்ளை ஊர்தி ஆதலால் * அது என்கொல் மின் கொள் நேமியாய் *
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல் * காதலித்ததே? (19)
Pasuram 20 · corpus 771
கூசம் ஒன்றும் இன்றி * மாசுணம் படுத்து வேலை நீர் *
பேச நின்ற தேவர் வந்து * பாட முன் கிடந்ததும் **
பாசம் நின்ற நீரில் வாழும் * ஆமையான கேசவா *
ஏச அன்று நீ கிடந்தவாறு * கூறு தேறவே (20)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.