Corpus pasurams 862–871

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 111 · corpus 862

Pasuram 111

Study resources at Uveda
வைது நின்னை வல்லவா * பழித்தவர்க்கும் மாறில் போர் *
 செய்து நின்ன செற்றத் தீயில் * வெந்தவர்க்கும் வந்து உன்னை **
 எய்தல் ஆகும் என்பர் * ஆதலால் எம் மாய நாயினேன் *
 செய்த குற்றம் நற்றமாகவே கொள் * ஞால நாதனே (111)

Pasuram 112 · corpus 863

Pasuram 112

Study resources at Uveda
வாள்கள் ஆகி நாள்கள் செல்ல * நோய்மை குன்றி மூப்பு எய்தி *
 மாளு நாள் அது ஆதலால் * வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே **
 ஆளது ஆகும் நன்மை என்று * நன்குணர்ந்து அது அன்றியும் *
 மீள்வு இலாத போகம் * நல்க வேண்டும் மால பாதமே (112)

Pasuram 113 · corpus 864

Pasuram 113

Study resources at Uveda
சலம் கலந்த செஞ்சடைக் * கறுத்த கண்டன் வெண்தலை *
 புலன் கலங்க உண்ட பாதகத்தன் * வன் துயர் கெட **
 அலங்கல் மார்வில் வாச நீர் * கொடுத்தவன் அடுத்த சீர் *
 நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம் * எண்ணு வாழி நெஞ்சமே (113)

Pasuram 114 · corpus 865

Pasuram 114

Study resources at Uveda
ஈனமாய எட்டும் நீக்கி * ஏதம் இன்றி மீதுபோய்
 வானம் ஆள வல்லையேல் * வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே **
 ஞானம் ஆகி ஞாயிறு ஆகி * ஞால முற்றும் ஓர் எயிற்று *
 ஏனமாய் இடந்த மூர்த்தி * எந்தை பாதம் எண்ணியே (114)

Pasuram 115 · corpus 866

Pasuram 115

Study resources at Uveda
அத்தன் ஆகி அன்னை ஆகி * ஆளும் எம் பிரானுமாய் *
 ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து * நம்மை ஆட்கொள்வான் **
 முத்தனார் முகுந்தனார் * புகுந்து நம்முள் மேவினர் *
 எத்தினால் இடர்க்கடல் கிடத்தி * ஏழை நெஞ்சமே! (115)

Pasuram 116 · corpus 867

Pasuram 116

Study resources at Uveda
மாறு செய்த வாள் அரக்கன் * நாள் உலப்ப அன்று இலங்கை *
 நீறு செய்து சென்று கொன்று * வென்றி கொண்ட வீரனார் **
 வேறு செய்து தம்முள் என்னை * வைத்திடாமையால் * நமன்
 கூறுசெய்து கொண்டு இறந்த * குற்றம் எண்ண வல்லனே? (116)

Pasuram 117 · corpus 868

Pasuram 117

Study resources at Uveda
அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு * ஆய மூப்பு இவை *
 வைத்த சிந்தை வைத்த ஆக்கை * மாற்றி வானில் ஏற்றுவான் **
 அச்சுதன் அனந்த கீர்த்தி * ஆதி அந்தம் இல்லவன் *
 நச்சு நாகனைக் கிடந்த * நாதன் வேத கீதனே (117)

Pasuram 118 · corpus 869

Pasuram 118

Study resources at Uveda
சொல்லினும் தொழிற்கணும் * தொடக்கு அறாத அன்பினும் *
 அல்லும் நன் பகலினோடும் * ஆன மாலை காலையும் **
 வல்லி நாள் மலர்க் கிழத்தி * நாத பாத போதினை *
 புல்லி உள்ளம் விள்வு இலாது * பூண்டு மீண்டது இல்லையே (118)

Pasuram 119 · corpus 870

Pasuram 119

Study resources at Uveda
பொன்னி சூழ் அரங்கம் மேய * பூவை வண்ண மாய கேள் *
 என்னது ஆவி என்னும் * வல்வினையினுள் கொழுந்து எழுந்து **
 உன்ன பாதம் என்ன நின்ற * ஒண்சுடர்க் கொழுமலர் *
 மன்ன வந்து பூண்டு * வாட்டம் இன்றி எங்கும் நின்றதே (119)

Pasuram 120 · corpus 871

Pasuram 120

Study resources at Uveda
இயக்கு அறாத பல் பிறப்பில் * என்னை மாற்றி இன்று வந்து *
 உயக்கொள் மேக வண்ணன் நண்ணி * என்னிலாய தன்னுளே **
 மயக்கினான் தன் மன்னு சோதி * ஆதலால் என் ஆவி தான் *
 இயக்கு எலாம் அறுத்து * அறாத இன்ப வீடு பெற்றதே (120)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.