Corpus pasurams 852–861

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 101 · corpus 852

Pasuram 101

Study resources at Uveda
இரந்து உரைப்பது உண்டு வாழி * ஏம நீர் நிறத்து அமா *
 வரம் தரும் திருக்குறிப்பில் * வைத்தது ஆகில் மன்னு சீர் **
 பரந்த சிந்தை ஒன்றிநின்று * நின்ன பாத பங்கயம் *
 நிரந்தரம் நினைப்பதாக * நீ நினைக்க வேண்டுமே (101)

Pasuram 102 · corpus 853

Pasuram 102

Study resources at Uveda
விள்வு இலாத காதலால் * விளங்கு பாத போதில் வைத்து *
 உள்ளுவேனது ஊன நோய் * ஒழிக்குமா தெழிக்கு நீர் **
 பள்ளி மாய பன்றி ஆய * வென்றி வீர குன்றினால் *
 துள்ளுநீர் வரம்பு செய்த * தோன்றல் ஒன்று சொல்லிடே (102)

Pasuram 103 · corpus 854

Pasuram 103

Study resources at Uveda
திருக் கலந்து சேரும் மார்ப * தேவதேவ தேவனே *
 இருக் கலந்த வேத நீதி * ஆகி நின்ற நின்மலா **
 கருக் கலந்த காளமேக * மேனி ஆய நின் பெயர் *
 உருக் கலந்து ஒழிவிலாது * உரைக்குமாறு உரைசெயே (103)

Pasuram 104 · corpus 855

Pasuram 104

Study resources at Uveda
கடுங் கவந்தன் வக்கரன் * கரன் முரன் சிரம் அவை *
 இடந்து கூறு செய்த * பல் படைத் தடக்கை மாயனே **
 கிடந்து இருந்து நின்று இயங்கு * போதும் நின்ன பொற்கழல் *
 தொடர்ந்து வீள்வு இலாதது ஒர் * தொடர்ச்சி நல்க வேண்டுமே (104)

Pasuram 105 · corpus 856

Pasuram 105

Study resources at Uveda
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் * இரந்து கொண்டு அளந்து மண் *
 கண்ணுள் அல்லது இல்லை என்று * வென்ற காலம் ஆயினாய் **
 பண்ணை வென்ற இன்சொல் மங்கை * கொங்கை தங்கு பங்கயக்
 கண்ண * நின்ன வண்ணம் அல்லது இல்லை * எண்ணும் வண்ணமே (105)

Pasuram 106 · corpus 857

Pasuram 106

Study resources at Uveda
கறுத்து எதிர்ந்த காலநேமி * காலனோடு கூட * அன்று
 அறுத்த ஆழி சங்கு தண்டு * வில்லும் வாளும் ஏந்தினாய் **
 தொறுக் கலந்த ஊனம் அஃது * ஒழிக்க அன்று குன்றம் முன் *
 பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் * நேசம் இல்லை நெஞ்சமே (106)

Pasuram 107 · corpus 858

Pasuram 107

Study resources at Uveda
காய் சினத்த காசி மன்னன் * வக்கரன் பவுண்டிரன் *
 மாசினத்த மாலி மான் * சுமாலி கேசி தேனுகன் **
 நாசம் உற்று வீழ * நாள் கவர்ந்த நின் கழற்கு அலால் *
 நேச பாசம் எத் திறத்தும் * வைத்திடேன் எம் ஈசனே (107)

Pasuram 108 · corpus 859

Pasuram 108

Study resources at Uveda
கேடு இல் சீர் வரத்தினாய்க் * கெடும் வரத்து அயன் அரன் *
 நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் * நாடு நண்ணினும் **
 வீடது ஆன போகம் எய்தி * வீற்றிருந்த போதிலும் *
 கூடும் ஆசை அல்லது ஒன்று * கொள்வனோ குறிப்பிலே? (108)

Pasuram 109 · corpus 860

Pasuram 109

Study resources at Uveda
சுருக்குவாரை இன்றியே * சுருங்கினாய் சுருங்கியும் *
 பெருக்குவாரை இன்றியே * பெருக்க மெய்து பெற்றியோய் **
 செருக்குவார்கள் தீக்குணங்கள் * தீர்த்த தேவதேவன் என்று *
 இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த * யானும் ஏத்தினேன் (109)

Pasuram 110 · corpus 861

Pasuram 110

Study resources at Uveda
தூயனாயும் அன்றியும் * சுரும்பு உலாவு தண் துழாய் *
 மாய நின்னை நாயினேன் * வணங்கி வாழ்த்தும் ஈதெலாம் **
 நீயும் நின் குறிப்பினில் * பொறுத்து நல்கு வேலை நீர் *
 பாயலோடு பத்தர் சித்தம் * மேய வேலை வண்ணனே (110)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.