Corpus pasurams 2032–2041

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1 · corpus 2032

Pasuram 1

Study resources at Uveda
நிதியினைப் பவளத் தூணை * நெறிமையால் நினைய வல்லார் *
 கதியினைக் கஞ்சன் மாளக் * கண்டு முன் அண்டம் ஆளும் **
 மதியினை மாலை வாழ்த்தி * வணங்கி என் மனத்து வந்த *
 விதியினைக் கண்டு கொண்ட * தொண்டனேன் விடுகிலேனே 1

Pasuram 2 · corpus 2033

Pasuram 2

Study resources at Uveda
காற்றினைப் புனலைத் தீயைக் * கடி மதிள் இலங்கை செற்ற
 ஏற்றினை * இமயம் மேய * எழில் மணித் திரளை * இன்ப
 ஆற்றினை அமுதம் தன்னை * அவுணன் ஆர் உயிரை உண்ட
 கூற்றினை * குணங்கொண்டு உள்ளம் * கூறு நீ கூறுமாறே 2

Pasuram 3 · corpus 2034

Pasuram 3

Study resources at Uveda
பா இரும் பரவை தன்னுள் * பரு வரை திரித்து * வானோர்க்கு
 ஆய் இருந்து அமுதங் கொண்ட * அப்பனை எம் பிரானை **
 வேய் இருஞ் சோலை சூழ்ந்து * விரி கதிர் இரிய நின்ற *
 மா இருஞ் சோலை மேய * மைந்தனை வணங்கினேனே 3

Pasuram 4 · corpus 2035

Pasuram 4

Study resources at Uveda
கேட்க யான் உற்றது உண்டு * கேழல் ஆய் உலகம் கொண்ட *
 பூக் கெழு வண்ணனாரைப் * போதரக் கனவில் கண்டு **
 வாக்கினால் கருமம் தன்னால் * மனத்தினால் சிரத்தை தன்னால் *
 வேட்கை மீதூர வாங்கி * விழுங்கினேற்கு இனியவாறே 4

Pasuram 5 · corpus 2036

Pasuram 5

Study resources at Uveda
இரும்பு அனன்று உண்ட நீர்போல் * எம் பெருமானுக்கு * என் தன்
 அரும் பெறல் அன்பு புக்கிட்டு * அடிமைபூண்டு உய்ந்து போனேன் **
 வரும் புயல் வண்ணனாரை * மருவி என் மனத்து வைத்து *
 கரும்பின் இன் சாறு போலப் * பருகினேற்கு இனியவாறே 5

Pasuram 6 · corpus 2037

Pasuram 6

Study resources at Uveda
மூவரில் முதல்வன் ஆய * ஒருவனை உலகம் கொண்ட *
 கோவினைக் குடந்தை மேய * குரு மணித் திரளை ** இன்பப்
 பாவினைப் பச்சைத் தேனைப் * பைம் பொன்னை அமரர் சென்னிப்
 பூவினை * புகழும் தொண்டர் * என் சொல்லிப் புகழ்வர் தாமே? 6

Pasuram 7 · corpus 2038

Pasuram 7

Study resources at Uveda
இம்மையை மறுமை தன்னை * எமக்கு வீடு ஆகி நின்ற *
 மெய்ம்மையை விரிந்த சோலை * வியன் திரு அரங்கம் மேய **
 செம்மையைக் கருமை தன்னைத் * திருமலை ஒருமையானை *
 தன்மையை நினைவார் என் தன் * தலைமிசை மன்னுவாரே 7

Pasuram 8 · corpus 2039

Pasuram 8

Study resources at Uveda
வானிடைப் புயலை மாலை * வரையிடைப் பிரசம் ஈன்ற *
 தேனிடைக் கரும்பின் சாற்றைத் * திருவினை மருவி வாழார் **
 மானிடப் பிறவி அந்தோ * மதிக்கிலர் கொள்க * தம் தம்
 ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு * உறுதியே வேண்டினாரே 8

Pasuram 9 · corpus 2040

Pasuram 9

Study resources at Uveda
உள்ளமோ ஒன்றில் நில்லாது * ஓசையில் எரி நின்று உண்ணும் *
 கொள்ளிமேல் எறும்புபோலக் * குழையுமால் என் தன் உள்ளம் **
 தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் * தேவராய் உலகம் கொண்ட *
 ஒள்ளியீர் உம்மை அல்லால் * எழுமையும் துணை இலோமே 9

Pasuram 10 · corpus 2041

Pasuram 10

Study resources at Uveda
சித்தமும் செவ்வை நில்லாது * என் செய்கேன் தீவினையேன் *
 பத்திமைக்கு அன்பு உடையேன் ஆவதே * பணியாய் எந்தாய் **
 முத்து ஒளி மரகதமே முழங்கு ஒளி முகில் வண்ணா * என்
 அத்த நின் அடிமை அல்லால் * யாதும் ஒன்று அறிகிலேனே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.