Corpus pasurams 2042–2051

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 11 · corpus 2042

Pasuram 11

Study resources at Uveda
தொண்டு எல்லாம் பரவி நின்னைத் * தொழுது அடி பணியுமாறு
 கண்டு * தான் கவலை தீர்ப்பான் ஆவதே * பணியாய் எந்தாய் **
 அண்டம் ஆய் எண் திசைக்கும் * ஆதி ஆய் நீதி ஆன *
 பண்டம் ஆம் பரம சோதி * நின்னையே பரவுவேனே 11

Pasuram 12 · corpus 2043

Pasuram 12

Study resources at Uveda
ஆவியை அரங்க மாலை * அழுக்கு உடம்பு எச்சில் வாயால் *
 தூய்மை இல் தொண்டனேன் நான் * சொல்லினேன் தொல்லை நாமம் **
 பாவியேன் பிழைத்தவாறு என்று * அஞ்சினேற்கு அஞ்சல் என்று *
 காவிபோல் வண்ணர் வந்து * என் கண்ணுளே தோன்றினாரே 12

Pasuram 13 · corpus 2044

Pasuram 13

Study resources at Uveda
இரும்பு அனன்று உண்ட நீரும் * போதரும் கொள்க * என் தன்
 அரும் பிணி பாவம் எல்லாம் * அகன்றன என்னை விட்டு **
 சுரும்பு அமர் சோலை சூழ்ந்த * அரங்க மா கோயில் கொண்ட *
 கரும்பினைக் கண்டுகொண்டு * என் கண் இணை களிக்குமாறே 13

Pasuram 14 · corpus 2045

Pasuram 14

Study resources at Uveda
காவியை வென்ற கண்ணார் * கலவியே கருதி * நாளும்
 பாவியேன் ஆக எண்ணி * அதனுள்ளே பழுத்தொழிந்தேன் **
 தூவி சேர் அன்னம் மன்னும் * சூழ் புனல் குடந்தையானை *
 பாவியேன் பாவியாது * பாவியேன் ஆயினேனே 14

Pasuram 15 · corpus 2046

Pasuram 15

Study resources at Uveda
முன் பொலா இராவணன் தன் * முது மதிள் இலங்கை வேவித்து *
 அன்பினால் அனுமன் வந்து * ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு **
 என்பு எலாம் உருகி உக்கிட்டு * என்னுடை நெஞ்சம் என்னும் *
 அன்பினால் ஞான நீர் கொண்டு * ஆட்டுவன் அடியனேனே 15

Pasuram 16 · corpus 2047

Pasuram 16

Study resources at Uveda
மாய மான் மாயச் செற்று * மருது இற நடந்து * வையம்
 தாய் அமா பரவை பொங்கத் * தட வரை திரித்து ** வானோர்க்கு
 ஈயும் மால் எம்பிரானார்க்கு * என்னுடைச் சொற்கள் என்னும் *
 தூய மா மாலைகொண்டு * சூட்டுவன் தொண்டனேனே 16

Pasuram 17 · corpus 2048

Pasuram 17

Study resources at Uveda
பேசினார் பிறவி நீத்தார் * பேர் உளான் பெருமை பேசி *
 ஏசினார் உய்ந்து போனார் * என்பது இவ் உலகின் வண்ணம் **
 பேசினேன் ஏச மாட்டேன் * பேதையேன் பிறவி நீத்தற்கு *
 ஆசையோ பெரிது கொள்க * அலை கடல் வண்ணர்பாலே 17

Pasuram 18 · corpus 2049

Pasuram 18

Study resources at Uveda
இளைப்பினை இயக்கம் நீக்கி * இருந்து முன் இமையைக் கூட்டி *
 அளப்பு இல் ஐம்புலன் அடக்கி * அன்பு அவர்கண்ணே வைத்து **
 துளக்கம் இல் சிந்தைசெய்து * தோன்றலும் சுடர்விட்டு * ஆங்கே
 விளக்கினை விதியின் காண்பார் * மெய்ம்மையைக் காண்கிற்பாரே 18

Pasuram 19 · corpus 2050

Pasuram 19

Study resources at Uveda
பிண்டி ஆர் மண்டை ஏந்திப் * பிறர் மனை திரிதந்து உண்ணும் *
 முண்டியான் சாபம் தீர்த்த * ஒருவன் ஊர் ** உலகம் ஏத்தும்
 கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சி பேர் மல்லை என்று
 மண்டினார் * உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யல் ஆமே? 19

Pasuram 20 · corpus 2051

Pasuram 20

Study resources at Uveda
வானவர் தங்கள் கோனும் * மலர்மிசை அயனும் * நாளும்
 தே மலர் தூவி ஏத்தும் * சேவடிச் செங் கண் மாலை **
 மான வேல் கலியன் சொன்ன * வண் தமிழ் மாலை நாலைந்தும் *
 ஊனம் அது இன்றி வல்லார் * ஒளி விசும்பு ஆள்வர் தாமே 20

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.