Pasuram 1 · corpus 872
Pasuram 1
காவலில் புலனை வைத்துக் * கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து *
நாவலிட்டு உழிதருகின்றோம் * நமன் தமர் தலைகள் மீதே **
மூவுலகு உண்டு உமிழ்ந்த * முதல்வ நின் நாமம் கற்ற *
ஆவலிப் புடைமை கண்டாய் * அரங்க மா நகருளானே (1)
Thondaradippodi Azhwar · Reading part · pasurams 1–10
Corpus pasurams 872–881
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 1 · corpus 872
காவலில் புலனை வைத்துக் * கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து *
நாவலிட்டு உழிதருகின்றோம் * நமன் தமர் தலைகள் மீதே **
மூவுலகு உண்டு உமிழ்ந்த * முதல்வ நின் நாமம் கற்ற *
ஆவலிப் புடைமை கண்டாய் * அரங்க மா நகருளானே (1)
Pasuram 2 · corpus 873
பச்சை மா மலை போல் மேனி * பவளவாய் கமலச் செங்கண் *
அச்சுதா அமரர் ஏறே * ஆயர் தம் கொழுந்தே என்னும் **
இச் சுவை தவிர யான் போய் * இந்திர லோகம் ஆளும் *
அச் சுவை பெறினும் வேண்டேன் * அரங்க மா நகருளானே (2)
Pasuram 3 · corpus 874
வேத நூல் பிராயம் நூறு * மனிசர் தாம் புகுவரேலும் *
பாதியும் உறங்கிப் போகும் * நின்ற பதினையாண்டு **
பேதை பாலகன் அது ஆகும் * பிணி பசி மூப்புத் துன்பம் *
ஆதலால் பிறவி வேண்டேன் * அரங்க மா நகருளானே (3)
Pasuram 4 · corpus 875
மொய்த்த வல்வினையுள் நின்று * மூன்று எழுத்து உடைய பேரால் *
கத்திரபந்தும் அன்றே * பராங்கதி கண்டு கொண்டான் **
இத்தனை அடியர் ஆனார்க்கு * இரங்கும் நம் அரங்கன் ஆய *
பித்தனைப் பெற்றும் அந்தோ * பிறவியுள் பிணங்குமாறே (4)
Pasuram 5 · corpus 876
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் * பெரியது ஓர் இடும்பை பூண்டு *
உண்டு இராக் கிடக்கும் போது * உடலுக்கே கரைந்து நைந்து **
தண் துழாய் மாலை மார்பன் * தமர்களாய்ப் பாடி ஆடி *
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் * தொழும்பர்சோறு உகக்குமாறே (5)
Pasuram 6 · corpus 877
மறம் சுவர் மதில் எடுத்து * மறுமைக்கே வெறுமை பூண்டு *
புறம் சுவர் ஓட்டை மாடம் * புரளும் போது அறிய மாட்டீர் **
அறம் சுவர் ஆகி நின்ற * அரங்கனார்க்கு ஆட் செய்யாதே *
புறஞ் சுவர் கோலஞ் செய்து * புள் கௌவக் கிடக்கின்றீரே (6)
Pasuram 7 · corpus 878
புலை அறம் ஆகி நின்ற * புத்தொடு சமணம் எல்லாம் *
கலை அறக் கற்ற மாந்தர் * காண்பரோ? கேட்பரோ தாம்? **
தலை அறுப்பு உண்டும் சாவேன் * சத்தியம் காண்மின் ஐயா *
சிலையினால் இலங்கை செற்ற * தேவனே தேவன் ஆவான் (7)
Pasuram 8 · corpus 879
வெறுப்பொடு சமணர் முண்டர் * விதி இல் சாக்கியர்கள் * நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில் * போவதே நோயது ஆகி **
குறிப்பு எனக்கு அடையும் ஆகில் * கூடுமேல் தலையை * ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் * அரங்க மா நகருளானே (8)
Pasuram 9 · corpus 880
மற்றும் ஓர் தெய்வம் உண்டே? * மதி இலா மானிடங்காள் *
உற்றபோது அன்றி நீங்கள் * ஒருவன் என்று உணர மாட்டீர் **
அற்றம் மேல் ஒன்று அறியீர் * அவன் அல்லால் தெய்வம் இல்லை *
கற்றினம் மேய்த்த எந்தை * கழலிணை பணிமின் நீரே (9)
Pasuram 10 · corpus 881
நாட்டினான் தெய்வம் எங்கும் * நல்லது ஓர் அருள் தன்னாலே *
காட்டினான் திருவரங்கம் * உய்பவர்க்கு உய்யும் வண்ணம் **
கேட்டிரே நம்பிமீர்காள் * கெருட வாகனனும் நிற்க *
சேட்டை தன் மடியகத்துச் * செல்வம் பார்த்து இருக்கின்றீரே (10)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.