Corpus pasurams 882–891

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 11 · corpus 882

Pasuram 11

Study resources at Uveda
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் * அடைத்து உலகங்கள் உய்ய *
 செருவிலே அரக்கர்கோனைச் * செற்ற நம் சேவகனார் **
 மருவிய பெரிய கோயில் * மதில் திருவரங்கம் என்னா *
 கருவிலே திரு இலாதீர் * காலத்தைக் கழிக்கின்றீரே (11)

Pasuram 12 · corpus 883

Pasuram 12

Study resources at Uveda
நமனும் முற்கலனும் பேச * நரகில் நின்றார்கள் கேட்க *
 நரகமே சுவர்க்கம் ஆகும் * நாமங்கள் உடைய நம்பி **
 அவனது ஊர் அரங்கம் என்னாது * அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் *
 கவலையுள் படுகின்றார் என்று * அதனுக்கே கவல்கின்றேனே (12)

Pasuram 13 · corpus 884

Pasuram 13

Study resources at Uveda
எறியும் நீர் வெறிகொள் வேலை * மாநிலத்து உயிர்கள் எல்லாம் *
 வெறிகொள் பூந்துளவ மாலை * விண்ணவர்கோனை ஏத்த **
 அறிவு இலா மனிசர் எல்லாம் * அரங்கம் என்று அழைப்பராகில் *
 பொறியில் வாழ் நரகம் எல்லாம் * புல் எழுந்து ஒழியும் அன்றே (13)

Pasuram 14 · corpus 885

Pasuram 14

Study resources at Uveda
வண்டினம் முரலும் சோலை * மயிலினம் ஆலும் சோலை *
 கொண்டல் மீது அணவும் சோலை * குயிலினம் கூவும் சோலை **
 அண்டர்கோன் அமரும் சோலை * அணி திருவரங்கம் என்னா *
 மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை விலக்கி * நாய்க்கு இடுமின் நீரே (14)

Pasuram 15 · corpus 886

Pasuram 15

Study resources at Uveda
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் * விதி இலா என்னைப் போலப் *
 பொய்யர்க்கே பொய்யன் ஆகும் * புட்கொடி உடைய கோமான் **
 உய்யப்போம் உணர்வினார்கட்கு * ஒருவன் என்று உணர்ந்த பின்னை *
 ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் * அழகன் ஊர் அரங்கம் அன்றே (15)

Pasuram 16 · corpus 887

Pasuram 16

Study resources at Uveda
சூதனாய்க் கள்வனாகித் * தூர்த்தரோடு இசைந்த காலம் *
 மாதரார் கயற்கண் என்னும் * வலையுள் பட்டு அழுந்துவேனை **
 போதரே என்று சொல்லிப் * புந்தியுள் புகுந்து * தன்பால்
 ஆதரம் பெருக வைத்த * அழகன் ஊர் அரங்கம் அன்றே (16)

Pasuram 17 · corpus 888

Pasuram 17

Study resources at Uveda
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் * விதி இலேன் மதி ஒன்று இல்லை *
 இரும்புபோல் வலிய நெஞ்சம் * இறை இறை உருகும் வண்ணம் **
 சுரும்பு அமர் சோலை சூழ்ந்த * அரங்க மா கோயில் கொண்ட *
 கரும்பினைக் கண்டு கொண்டு * என் கண்ணினை களிக்குமாறே (17)

Pasuram 18 · corpus 889

Pasuram 18

Study resources at Uveda
இனி திரைத் திவலை மோத * எறியும் தண் பரவை மீதே *
 தனி கிடந்து அரசு செய்யும் * தாமரைக்கண்ணன் எம்மான் **
 கனி இருந்தனைய செவ்வாய்க் * கண்ணனைக் கண்ட கண்கள் *
 பனி அரும்பு உதிருமாலோ * என் செய்கேன் பாவியேனே? (18)

Pasuram 19 · corpus 890

Pasuram 19

Study resources at Uveda
குடதிசை முடியை வைத்துக் * குணதிசை பாதம் நீட்டி *
 வடதிசை பின்பு காட்டித் * தென்திசை இலங்கை நோக்கி **
 கடல் நிறக் கடவுள் எந்தை * அரவணைத் துயிலுமா கண்டு *
 உடல் எனக்கு உருகுமாலோ * என் செய்கேன் உலகத்தீரே? (19)

Pasuram 20 · corpus 891

Pasuram 20

Study resources at Uveda
பாயு நீர் அரங்கம் தன்னுள் * பாம்பு அணைப் பள்ளிகொண்ட *
 மாயனார் திரு நன் மார்வும் * மரதக உருவும் தோளும் **
 தூய தாமரைக் கண்களும் * துவர் இதழ்ப் பவள வாயும் *
 ஆய சீர் முடியும் தேசும் * அடியரோர்க்கு அகலல் ஆமே? (20)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.