Corpus pasurams 912–916

This neutral reading part groups 5 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 41 · corpus 912

Pasuram 41

Study resources at Uveda
வானுளார் அறியல் ஆகா * வானவா என்பர் ஆகில் *
 தேனுலாம் துளப மாலைச் * சென்னியாய் என்பர் ஆகில் **
 ஊனம் ஆயினகள் செய்யும் * ஊனகாரகர்களேலும் *
 போனகம் செய்த சேடம் * தருவரேல் புனிதம் அன்றே (41)

Pasuram 42 · corpus 913

Pasuram 42

Study resources at Uveda
பழுது இலா ஒழுகல் ஆற்றுப் * பல சதுப்பேதிமார்கள் *
 இழிகுலத்தவர்களேலும் * எம் அடியார்கள் ஆகில் **
 தொழுமின் நீர் கொடுமின் கொள்மின் * என்று நின்னோடும் ஒக்க *
 வழிபட அருளினாய் போல் * மதில் திருவரங்கத்தானே (42)

Pasuram 43 · corpus 914

Pasuram 43

Study resources at Uveda
அமர ஓர் அங்கம் ஆறும் * வேதம் ஓர் நான்கும் ஓதி *
 தமர்களில் தலைவராய * சாதி அந்தணர்களேலும் **
 நுமர்களைப் பழிப்பர் ஆகில் * நொடிப்பது ஓர் அளவில் * ஆங்கே
 அவர்கள்தாம் புலையர் போலும் * அரங்க மா நகருளானே (43)

Pasuram 44 · corpus 915

Pasuram 44

Study resources at Uveda
பெண் உலாம் சடையினானும் * பிரமனும் உன்னைக் காண்பான் *
 எண் இலா ஊழி ஊழி * தவம் செய்தார் வெள்கி நிற்ப **
 விண் உளார் வியப்ப வந்து * ஆனைக்கு அன்று அருளை ஈந்த
 கண்ணறா * உன்னை என்னோ? * களைகணாக் கருதுமாறே (44)

Pasuram 45 · corpus 916

Pasuram 45

Study resources at Uveda
வள எழும் தவள மாட * மதுரை மா நகரந் தன்னுள் *
 கவள மால் யானை கொன்ற * கண்ணனை அரங்க மாலை **
 துளவத் தொண்டு ஆய தொல் சீர்த் * தொண்டரடிப் பொடி சொல் *
 இளைய புன் கவிதையேலும் * எம்பிராற்கு இனியவாறே (45)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.