Thondaradippodi Azhwar · Reading part · pasurams 31–40
Thirumalai Pasurams 31–40
10pasurams
Corpus pasurams 902–911
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
மெய் எல்லாம் போக விட்டு * விரிகுழலாரில் பட்டு *
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட * போழ்க்கனேன் வந்து நின்றேன் **
ஐயனே அரங்கனே * உன் அருள் என்னும் ஆசை தன்னால் *
பொய்யனேன் வந்து நின்றேன் * பொய்யனேன் பொய்யனேனே (33)
உள்ளத்தே உறையும் மாலை * உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா *
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் * தொண்டுக்கே கோலம் பூண்டு **
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் * உடன் இருந்து அறிதி என்று *
வெள்கிப்போய் என்னுள்ளே நான் * விலவு அறச் சிரித்திட்டேனே (34)
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் * மைந்தனே மதுர ஆறே *
உழைக் கன்றே போல நோக்கம் * உடையவர் வலையுள் பட்டு **
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது * ஒழிவதே உன்னை யன்றே *
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி * அரங்கமா நகருளானே (36)
மேம் பொருள் போக விட்டு * மெய்ம்மையை மிக உணர்ந்து *
ஆம் பரிசு அறிந்துகொண்டு * ஐம்புலன் அகத்து அடக்கி **
காம்பு அறத் தலை சிரைத்து * உன் கடைத்தலை இருந்து வாழும் *
சோம்பரை உகத்தி போலும் * சூழ் புனல் அரங்கத்தானே (38)