This page preserves the source-defined chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்கு ஆய் *
விளக்கு ஒளி ஆய் முளைத்து எழுந்த திங்கள் தான் ஆய் *
பின் உரு ஆய் முன் உருவில் பிணி மூப்பு இல்லாப் *
பிறப்பிலி ஆய் இறப்பதற்கே எண்ணாது ** எண்ணும்
பொன் உரு ஆய் மணி உருவில் பூதம் ஐந்து ஆய்ப் *
புனல் உரு ஆய் அனல் உருவில் திகழும் சோதி *
தன் உரு ஆய் என் உருவில் நின்ற எந்தை *
தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே 1
பார் உருவில் நீர் எரி கால் விசும்பும் ஆகிப் *
பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற *
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற *
இமையவர் தம் திருவுரு வேறு எண்ணும்போது **
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ *
ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற *
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி *
முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே 2
திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் *
திரேதைக்கண் வளை உருவாய்த் திகழ்ந்தான் என்றும் *
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் *
பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை **
ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது *
ஊழிதோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால் *
கரு வடிவில் செங் கண்ண வண்ணன் தன்னைக் *
கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே? 3
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை *
இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய் *
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகித் *
திசை நான்கும் ஆய்த் திங்கள் ஞாயிறு ஆகி **
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா
அந்தணனை * அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை * மந்திரத்தால் மறவாது என்றும் *
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே 4
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப *
ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து *
எண் மதியும் கடந்து அண்டமீது போகி *
இரு விசும்பினூடு போய் எழுந்து ** மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடித் *
தாரகையின் புறந் தடவி அப்பால் மிக்கு *
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை *
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே 5
அலம்புரிந்த நெடுந் தடக்கை அமரர் வேந்தன் *
அம் சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும் *
சலம்புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன் *
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி **
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த *
நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி *
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப் *
பூங் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே 6
வற்பு உடைய வரை நெடுந் தோள் மன்னர் மாள *
வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு *
வெற்பு உடைய நெடுங் கடலுள் தனி வேல் உய்த்த *
வேள் முதலா வென்றான் ஊர் விந்தம் மேய **
கற்பு உடைய மடக் கன்னி காவல் பூண்ட *
கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி *
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற *
பூங் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே 7
பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட *
புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான் *
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் *
என் அறிவன் ஏழையேன்? ** உலகம் ஏத்தும்
தென் ஆனாய் வட ஆனாய் குடபால் ஆனாய் *
குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய் * பின் ஆனார் வணங்கும் சோதி! *
திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே! 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.