Corpus pasurams 2062–2071

This page preserves the source-defined chapter 2 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 11 · corpus 2062

Pasuram 11

Study resources at Uveda
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் *
 பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் *
 எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள் *
 எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் **
 மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் *
 மட மானை இது செய்தார் தம்மை * மெய்யே
 கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்! *
 கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே? 11

Pasuram 12 · corpus 2063

Pasuram 12

Study resources at Uveda
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும் *
 நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் *
 நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ! என்னும் *
 வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா! என்னும் **
 அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும் *
 அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும் *
 என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் *
 இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே 12

Pasuram 13 · corpus 2064

Pasuram 13

Study resources at Uveda
கல் எடுத்துக் கல் மாரி காத்தாய்! என்றும் *
 காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்றும் *
 வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்றும் *
 வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்றும் **
 மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்றும் *
 மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்றும் *
 சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று *
 துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே 13

Pasuram 14 · corpus 2065

Pasuram 14

Study resources at Uveda
முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை * மூவா
 மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற *
 அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
 அந்தணனை * அந்தணர் தம் சிந்தையானை **
 விளக்கு ஒளியை மரதகத்தைத் திருத்தண்காவில் *
 வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *
 வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று *
 மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே 14

Pasuram 15 · corpus 2066

Pasuram 15

Study resources at Uveda
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
 களிறு என்றும் * கடல் கிடந்த கனியே! என்றும் *
 அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி *
 அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான்! என்றும் *
 சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கித் *
 தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு *
 மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே *
 மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே 15

Pasuram 16 · corpus 2067

Pasuram 16

Study resources at Uveda
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும் *
 கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும் *
 மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும் *
 வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும் **
 வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்
 விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும் *
 துன்று குழல் கரு நிறத்து என் துணையே! என்றும் *
 துணை முலைமேல் துளி சோரச் சோர்கின்றாளே! 16

Pasuram 17 · corpus 2068

Pasuram 17

Study resources at Uveda
பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்பப் *
 பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று *
 செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும் *
 சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ** ஆங்கே
 தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித் *
 தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு *
 நங்காய்! நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன *
 நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே 17

Pasuram 18 · corpus 2069

Pasuram 18

Study resources at Uveda
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் *
 கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் *
 பார் வண்ண மட மங்கை பத்தர் * பித்தர்
 பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன் **
 ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் *
 எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் *
 நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் *
 இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே 18

Pasuram 19 · corpus 2070

Pasuram 19

Study resources at Uveda
முற்று ஆரா வன முலையாள் பாவை * மாயன்
 மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
 அற்றாள் * தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் *
 அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ! என்னும் **
 பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள் *
 பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடி *
 பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் *
 பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே 19

Pasuram 20 · corpus 2071

Pasuram 20

Study resources at Uveda
தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாளத் *
 தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி *
 போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாளப் *
 பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க
 பார் ஆளன் ** பார் இடந்து பாரை உண்டு
 பார் உமிழ்ந்து பார் அளந்து * பாரை ஆண்ட
 பேர் ஆளன் * பேர் ஓதும் பெண்ணை மண்மேல் *
 பெருந்தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே? 20

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.