Corpus pasurams 2791–2801

This page preserves the source-defined decade 1, chapter 1 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1 · corpus 2791

Pasuram 1

Study resources at Uveda
உயர்வு அற உயர் நலம் * உடையவன் எவன்? * அவன் *
 மயர்வு அற மதி நலம் * அருளினன் எவன்? அவன் **
 அயர்வு அறும் * அமரர்கள் அதிபதி எவன்? அவன் *
 துயர் அறு சுடர் அடி * தொழுது எழு என் மனனே (1)

Pasuram 2 · corpus 2792

Pasuram 2

Study resources at Uveda
மனன் அகம் மலம் அற * மலர்மிசை எழுதரும் *
 மனன் உணர்வு அளவு இலன் * பொறி உணர்வு அவை இலன் **
 இனன் உணர் முழு நலம் * எதிர் நிகழ் கழிவினும் *
 இனன் இலன் எனன் உயிர் * மிகுநரை இலனே (2)

Pasuram 3 · corpus 2793

Pasuram 3

Study resources at Uveda
இலன் அது உடையன் இது * என நினைவு அரியவன் *
 நிலனிடை விசும்பிடை * உருவினன் அருவினன் **
 புலனொடு புலன் அலன் * ஒழிவு இலன் பரந்த * அந்
 நலன் உடை ஒருவனை * நணுகினம் நாமே (3)

Pasuram 4 · corpus 2794

Pasuram 4

Study resources at Uveda
நாம் அவன் இவன் உவன் * அவள் இவள் உவள் எவள் *
 தாம் அவர் இவர் உவர் * அது இது உது எது **
 வீம் அவை இவை உவை * அவை நலம் தீங்கு அவை *
 ஆம் அவை ஆயவை ஆய் * நின்ற அவரே (4)

Pasuram 5 · corpus 2795

Pasuram 5

Study resources at Uveda
அவரவர் தமதமது * அறிவு அறி வகைவகை *
 அவரவர் இறையவர் * என அடி அடைவர்கள் **
 அவரவர் இறையவர் * குறைவு இலர் இறையவர் *
 அவரவர் விதிவழி * அடைய நின்றனரே (5)

Pasuram 6 · corpus 2796

Pasuram 6

Study resources at Uveda
நின்றனர் இருந்தனர் * கிடந்தனர் திரிந்தனர் *
 நின்றிலர் இருந்திலர் * கிடந்திலர் திரிந்திலர் **
 என்றும் ஓர் இயல்வினர் * என நினைவு அரியவர் *
 என்றும் ஓர் இயல்வொடு * நின்ற எம் திடரே (6)

Pasuram 7 · corpus 2797

Pasuram 7

Study resources at Uveda
திட விசும்பு எரி வளி * நீர் நிலம் இவைமிசை *
 படர் பொருள் முழுவதும் ஆய் * அவைஅவைதொறும் **
 உடல்மிசை உயிர் எனக் * கரந்து எங்கும் பரந்துளன் *
 சுடர் மிகு சுருதியுள் * இவை உண்ட சுரனே (7)

Pasuram 8 · corpus 2798

Pasuram 8

Study resources at Uveda
சுரர் அறிவு அரு நிலை * விண் முதல் முழுவதும் *
 வரன் முதலாய் அவை * முழுது உண்ட பரபரன் **
 புரம் ஒரு மூன்று எரித்து * அமரர்க்கும் அறிவியந்து *
 அரன் அயன் என * உலகு அழித்து அமைத்து உளனே (8)

Pasuram 9 · corpus 2799

Pasuram 9

Study resources at Uveda
உளன் எனில் உளன் * அவன் உருவம் இவ் உருவுகள் *
 உளன் அலன் எனில் * அவன் அருவம் இவ் அருவுகள் **
 உளன் என இலன் என * இவை குணம் உடைமையில் *
 உளன் இரு தகைமையொடு * ஒழிவு இலன் பரந்தே (9)

Pasuram 10 · corpus 2800

Pasuram 10

Study resources at Uveda
பரந்த தண் பரவையுள் * நீர்தொறும் பரந்துளன் *
 பரந்த அண்டம் இது என * நிலம் விசும்பு ஒழிவு அற **
 கரந்த சில் இடந்தொறும் * இடம் திகழ் பொருள்தொறும் *
 கரந்து எங்கும் பரந்துளன் ** இவை உண்ட கரனே (10)

Pasuram 11 · corpus 2801

Pasuram 11

Study resources at Uveda
கர விசும்பு எரி வளி * நீர் நிலம் இவைமிசை *
 வரன் நவில் திறல் வலி * அளி பொறை ஆய்நின்ற **
 பரன் அடிமேல் * குருகூர்ச் சடகோபன் சொல் *
 நிரல் நிறை ஆயிரத்து * இவை பத்தும் வீடே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.