Corpus pasurams 2802–2812

This page preserves the source-defined decade 1, chapter 2 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 12 · corpus 2802

Pasuram 12

Study resources at Uveda
வீடுமின் முற்றவும் வீடு செய்து * உம் உயிர்
 வீடு உடையானிடை * வீடு செய்ம்மினே (1)

Pasuram 13 · corpus 2803

Pasuram 13

Study resources at Uveda
மின்னின் நிலை * இல மன் உயிர் ஆக்கைகள் **
 என்னும் இடத்து * இறை உன்னுமின் நீரே (2)

Pasuram 14 · corpus 2804

Pasuram 14

Study resources at Uveda
நீர் நுமது என்று இவை * வேர்முதல் மாய்த்து ** இறை
 சேர்மின் உயிர்க்கு * அதன் நேர் நிறை இல்லே (3)

Pasuram 15 · corpus 2805

Pasuram 15

Study resources at Uveda
இல்லதும் உள்ளதும் * அல்லது அவன் உரு **
 எல்லை இல் அந் நலம் ** புல்கு பற்று அற்றே (4)

Pasuram 16 · corpus 2806

Pasuram 16

Study resources at Uveda
அற்றது பற்று எனில் * உற்றது வீடு உயிர் **
 செற்ற அது மன் உறில் * அற்று இறை பற்றே (5)

Pasuram 17 · corpus 2807

Pasuram 17

Study resources at Uveda
பற்று இலன் ஈசனும் * முற்றவும் நின்றனன் **
 பற்று இலையாய் * அவன் முற்றில் அடங்கே (6)

Pasuram 18 · corpus 2808

Pasuram 18

Study resources at Uveda
அடங்கு எழில் சம்பத்து ** அடங்கக் கண்டு ** ஈசன்
 அடங்கு எழில் அஃது என்று * அடங்குக உள்ளே (7)

Pasuram 19 · corpus 2809

Pasuram 19

Study resources at Uveda
உள்ளம் உரை செயல் * உள்ள இம் மூன்றையும் **
 உள்ளிக் கெடுத்து * இறை உள்ளில் ஒடுங்கே (8)

Pasuram 20 · corpus 2810

Pasuram 20

Study resources at Uveda
ஒடுங்க அவன்கண் * ஒடுங்கலும் எல்லாம் **
 விடும் பின்னும் ஆக்கை * விடும்பொழுது எண்ணே (9)

Pasuram 21 · corpus 2811

Pasuram 21

Study resources at Uveda
எண் பெருக்கு அந் நலத்து * ஒண் பொருள் ஈறு இல **
 வண் புகழ் நாரணன் * திண் கழல் சேரே (10)

Pasuram 22 · corpus 2812

Pasuram 22

Study resources at Uveda
சேர்த்தடத் * தென் குரு கூர்ச் சடகோபன் சொல் **
 சீர்த் தொடை ஆயிரத்து * ஓர்த்த இப் பத்தே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.