Corpus pasurams 3882–3892

This page preserves the source-defined decade 10, chapter 10 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1092 · corpus 3882

Pasuram 1092

Study resources at Uveda
முனியே நான்முகனே * முக்கண் அப்பா * என் பொல்லாக்
 கனிவாய்த் * தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா **
 தனியேன் ஆர் உயிரே * என் தலைமிசையாய் வந்திட்டு *
 இனி நான் போகல் ஒட்டேன் * ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே (1)

Pasuram 1093 · corpus 3883

Pasuram 1093

Study resources at Uveda
மாயம் செய்யேல் என்னை * உன் திரு மார்வத்து மாலை நங்கை *
 வாசம் செய் பூங் குழலாள் * திரு ஆணை நின் ஆணைகண்டாய் **
 நேசம் செய்து உன்னோடு என்னை * உயிர் வேறு இன்றி ஒன்றாகவே *
 கூசம் செய்யாது கொண்டாய் * என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ! (2)

Pasuram 1094 · corpus 3884

Pasuram 1094

Study resources at Uveda
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ! * என் பொல்லாக் கருமாணிக்கமே *
 ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு * நின் அலால் அறிகின்றிலேன் யான் **
 மேவித் தொழும் பிரமன் சிவன் * இந்திரன் ஆதிக்கு எல்லாம் *
 நாவிக் கமல முதல் கிழங்கே! * உம்பர் அந்த அதுவே (3)

Pasuram 1095 · corpus 3885

Pasuram 1095

Study resources at Uveda
உம்பர் அம் தண் பாழே ஓ! * அதனுள்மிசை நீயே ஓ *
 அம்பரம் நல் சோதி! * அதனுள் பிரமன் அரன் நீ **
 உம்பரும் யாதவரும் படைத்த * முனிவன் அவன் நீ *
 எம்பரம் சாதிக்கலுற்று * என்னைப் போர விட்டிட்டாயே (4)

Pasuram 1096 · corpus 3886

Pasuram 1096

Study resources at Uveda
போர விட்டிட்டு என்னை * நீ புறம் போக்கலுற்றால் * பின்னை யான்
 ஆரைக் கொண்டு எத்தை? அந்தோ! * எனது என்பது என்? யான் என்பது என்? **
 தீர இரும்பு * உண்ட நீர் அது போல * என் ஆர் உயிரை
 ஆரப் பருக * எனக்கு ஆரா அமுது ஆனாயே (5)

Pasuram 1097 · corpus 3887

Pasuram 1097

Study resources at Uveda
எனக்கு ஆரா அமுதாய் * எனது ஆவியை இன் உயிரை *
 மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் * இனி உண்டொழியாய் **
 புனக் காயா நிறத்த * புண்டரீகக் கண் செங்கனிவாய் *
 உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு * அன்பா என் அன்பேயோ (6)

Pasuram 1098 · corpus 3888

Pasuram 1098

Study resources at Uveda
கோல மலர்ப்பாவைக்கு அன்பு ஆகிய * என் அன்பேயோ *
 நீல வரை இரண்டு பிறை கவ்வி * நிமிர்ந்தது ஒப்ப **
 கோல வராகம் ஒன்றாய் * நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் *
 நீலக் கடல் கடைந்தாய் * உன்னை பெற்று இனிப் போக்குவனோ? (7)

Pasuram 1099 · corpus 3889

Pasuram 1099

Study resources at Uveda
பெற்று இனிப் போக்குவனோ * உன்னை என் தனிப் பேருயிரை? *
 உற்ற இருவினை ஆய் * உயிர் ஆய் பயன் ஆயவை ஆய் **
 முற்ற இம் மூவுலகும் * பெரும் தூறு ஆய் தூற்றில் புக்கு *
 முற்றக் கரந்து ஒளித்தாய் * என் முதல் தனி வித்தேயோ (8)

Pasuram 1100 · corpus 3890

Pasuram 1100

Study resources at Uveda
முதல் தனி வித்தேயோ! * முழு மூவுலகு ஆதிக்கு எல்லாம் *
 முதல் தனி உன்னை உன்னை * எனை நாள் வந்து கூடுவன் நான் **
 முதல் தனி அங்கும் இங்கும் * முழுமுற்றுறு வாழ் பாழாய் *
 முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து * உயர்ந்த முடிவிலீ ஓ! (9)

Pasuram 1101 · corpus 3891

Pasuram 1101

Study resources at Uveda
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த * முடிவில் பெரும் பாழே ஓ *
 சூழ்ந்து அதனில் பெரிய * பர நல் மலர்ச் சோதீ ஓ **
 சூழ்ந்து அதனில் பெரிய * சுடர் ஞான இன்பமே ஓ! *
 சூழ்ந்து அதனில் பெரிய * என் அவா அறச் சூழ்ந்தாயே (10)

Pasuram 1102 · corpus 3892

Pasuram 1102

Study resources at Uveda
அவா அறச் சூழ் * அரியை அயனை அரனை அலற்றி *
 அவா அற்று வீடு பெற்ற * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
 அவா இல் அந்தாதிகளால் * இவை ஆயிரமும் * முடிந்த
 அவா இல் அந்தாதி இப் பத்து அறிந்தார் * பிறந்தார் உயர்ந்தே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.