Pasuram 1081 · corpus 3871
Pasuram 1081
சூழ் விசும்பு அணி முகில் * தூரியம் முழக்கின *
ஆழ் கடல் அலை திரை * கை எடுத்து ஆடின **
ஏழ் பொழிலும் * வளம் ஏந்திய என் அப்பன் *
வாழ் புகழ் நாரணன் * தமரைக் கண்டு உகந்தே (1)
Nammazhvar · Pasurams 1081–1091
Corpus pasurams 3871–3881
This page preserves the source-defined decade 10, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 1081 · corpus 3871
சூழ் விசும்பு அணி முகில் * தூரியம் முழக்கின *
ஆழ் கடல் அலை திரை * கை எடுத்து ஆடின **
ஏழ் பொழிலும் * வளம் ஏந்திய என் அப்பன் *
வாழ் புகழ் நாரணன் * தமரைக் கண்டு உகந்தே (1)
Pasuram 1082 · corpus 3872
நாரணன் தமரைக் கண்டு உகந்து * நல் நீர் முகில் *
பூரண பொன் குடம் * பூரித்தது உயர் விண்ணில் **
நீர் அணி கடல்கள் * நின்று ஆர்த்தன * நெடு வரைத்
தோரணம் நிரைத்து * எங்கும் தொழுதனர் உலகே (2)
Pasuram 1083 · corpus 3873
தொழுதனர் உலகர்கள் * தூப நல் மலர் மழை
பொழிவனர் * பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே **
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் * முனிவர்கள் *
வழி இது வைகுந்தர்க்கு என்று * வந்து எதிரே (3)
Pasuram 1084 · corpus 3874
எதிர் எதிர் இமையவர் * இருப்பிடம் வகுத்தனர் *
கதிரவர் அவர் அவர் * கைந்நிரை காட்டினர் **
அதிர் குரல் முரசங்கள் * அலை கடல் முழக்கு ஒத்த *
மது விரி துழாய் முடி * மாதவன் தமர்க்கே (4)
Pasuram 1085 · corpus 3875
மாதவன் தமர் என்று * வாசலில் வானவர் *
போதுமின் எமது இடம் * புகுதுக என்றலும் **
கீதங்கள் பாடினர் * கின்னரர் கெருடர்கள் *
வேத நல் வாயவர் * வேள்வி உள்மடுத்தே (5)
Pasuram 1086 · corpus 3876
வேள்வி உள்மடுத்தலும் * விரை கமழ் நறும் புகை *
காளங்கள் வலம்புரி * கலந்து எங்கும் இசைத்தனர் **
ஆள்மின்கள் வானகம் * ஆழியான் தமர் என்று *
வாள் ஒண் கண் மடந்தையர் * வாழ்த்தினர் மகிழ்ந்தே (6)
Pasuram 1087 · corpus 3877
மடந்தையர் வாழ்த்தலும் * மருதரும் வசுக்களும் *
தொடர்ந்து எங்கும் * தோத்திரம் சொல்லினர் ** தொடுகடல்
கிடந்த எம் கேசவன் * கிளர் ஒளி மணிமுடி *
குடந்தை எம் கோவலன் * குடி அடியார்க்கே (7)
Pasuram 1088 · corpus 3878
குடி அடியார் இவர் * கோவிந்தன் தனக்கு என்று *
முடி உடை வானவர் * முறை முறை எதிர்கொள்ள **
கொடி அணி நெடு மதிள் * கோபுரம் குறுகினர் *
வடிவு உடை மாதவன் * வைகுந்தம் புகவே (8)
Pasuram 1089 · corpus 3879
வைகுந்தம் புகுதலும் * வாசலில் வானவர் *
வைகுந்தன் தமர் எமர் * எமது இடம் புகுது என்று **
வைகுந்தத்து அமரரும் * முனிவரும் வியந்தனர் *
வைகுந்தம் புகுவது * மண்ணவர் விதியே (9)
Pasuram 1090 · corpus 3880
விதிவகை புகுந்தனர் என்று * நல் வேதியர் *
பதியினில் பாங்கினில் * பாதங்கள் கழுவினர் **
நிதியும் நல் சுண்ணமும் * நிறை குட விளக்கமும் *
மதி முக மடந்தையர் * ஏந்தினர் வந்தே (10)
Pasuram 1091 · corpus 3881
வந்து அவர் எதிர் கொள்ள * மா மணி மண்டபத்து *
அந்தம் இல் பேரின்பத்து * அடியரோடு இருந்தமை **
கொந்து அலர் பொழில் * குருகூர்ச் சடகோபன் * சொல்
சந்தங்கள் ஆயிரத்து * இவை வல்லார் முனிவரே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.