Corpus pasurams 3035–3045

This page preserves the source-defined decade 3, chapter 3 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 245 · corpus 3035

Pasuram 245

Study resources at Uveda
ஒழிவு இல் காலம் எல்லாம் * உடனாய் மன்னி *
 வழு இலா * அடிமை செய்யவேண்டும் நாம் **
 தெழி குரல் அருவித் * திருவேங்கடத்து *
 எழில் கொள் சோதி * எந்தை தந்தை தந்தைக்கே (1)

Pasuram 246 · corpus 3036

Pasuram 246

Study resources at Uveda
எந்தை தந்தை தந்தை தந்தை * தந்தைக்கும் *
 முந்தை வானவர் * வானவர் * கோனொடும் **
 சிந்து பூ மகிழும் * திருவேங்கடத்து *
 அந்தம் இல் புகழ்க் * கார் எழில் அண்ணலே (2)

Pasuram 247 · corpus 3037

Pasuram 247

Study resources at Uveda
அண்ணல் மாயன் * அணி கொள் செந்தாமரைக்
 கண்ணன் * செங்கனி வாய்க் * கருமாணிக்கம் **
 தெள் நிறைச்சுனை நீர்த் * திருவேங்கடத்து *
 எண் இல் தொல் புகழ் * வானவர் ஈசனே (3)

Pasuram 248 · corpus 3038

Pasuram 248

Study resources at Uveda
ஈசன் வானவர்க்கு * என்பன் என்றால் * அது
 தேசமோ * திருவேங்கடத்தானுக்கு? **
 நீசனேன் * நிறைவு ஒன்றும் இலேன் * என் கண்
 பாசம் வைத்த * பரம் சுடர்ச் சோதிக்கே (4)

Pasuram 249 · corpus 3039

Pasuram 249

Study resources at Uveda
சோதி ஆகி * எல்லா உலகும் தொழும் *
 ஆதிமூர்த்தி என்றால் * அளவு ஆகுமோ? **
 வேதியர் * முழு வேதத்து அமுதத்தை *
 தீது இல் சீர்த் * திருவேங்கடத்தானையே? (5)

Pasuram 250 · corpus 3040

Pasuram 250

Study resources at Uveda
வேம் கடங்கள் * மெய்மேல் வினை முற்றவும் *
 தாங்கள் தங்கட்கு * நல்லனவே செய்வார் **
 வேங்கடத்து உறைவார்க்கு * நம என்னல்
ஆம் கடமை * அது சுமந்தார்கட்கே (6)

Pasuram 251 · corpus 3041

Pasuram 251

Study resources at Uveda
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு *
 அமர்ந்து வானவர் * வானவர் கோனொடும் **
 நமன்று எழும் * திருவேங்கடம் நங்கட்கு *
 சமன் கொள் வீடு தரும் * தடங் குன்றமே (7)

Pasuram 252 · corpus 3042

Pasuram 252

Study resources at Uveda
குன்றம் ஏந்திக் * குளிர் மழை காத்தவன் *
 அன்று ஞாலம் * அளந்த பிரான் ** பரன்
 சென்று சேர் * திருவேங்கட மா மலை *
 ஒன்றுமே தொழ * நம் வினை ஓயுமே (8)

Pasuram 253 · corpus 3043

Pasuram 253

Study resources at Uveda
ஓயும் மூப்புப் * பிறப்பு இறப்புப்பிணி *
 வீயுமாறு செய்வான் * திருவேங்கடத்து
 ஆயன் ** நாள் மலர் ஆம் * அடித்தாமரை *
 வாயுள்ளும் மனத்துள்ளும் * வைப்பார்கட்கே (9)

Pasuram 254 · corpus 3044

Pasuram 254

Study resources at Uveda
வைத்த நாள் வரை * எல்லை குறுகிச் சென்று *
 எய்த்து இளைப்பதன் * முன்னம் அடைமினோ **
 பைத்த பாம்பு அணையான் * திருவேங்கடம் *
 மொய்த்த சோலை * மொய் பூந் தடந் தாழ்வரே (10)

Pasuram 255 · corpus 3045

Pasuram 255

Study resources at Uveda
தாள் பரப்பி * மண் தாவிய ஈசனை *
 நீள் பொழில் * குருகூர்ச் சடகோபன் சொல் **
 கேழ் இல் ஆயிரத்து * இப் பத்தும் வல்லவர் *
 வாழ்வர் வாழ்வு எய்தி * ஞாலம் புகழவே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.