Corpus pasurams 3024–3034

This page preserves the source-defined decade 3, chapter 2 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 234 · corpus 3024

Pasuram 234

Study resources at Uveda
முந்நீர் ஞாலம் படைத்த * எம் முகில் வண்ணனே *
 அந் நாள் நீ தந்த * ஆக்கையின்வழி உழல்வேன் **
 வெம் நாள் நோய் வீய * வினைகளை வேர் அறப் பாய்ந்து *
 எந் நாள் யான் உன்னை * இனி வந்து கூடுவனே? (1)

Pasuram 235 · corpus 3025

Pasuram 235

Study resources at Uveda
வன் மா வையம் அளந்த * எம் வாமனா
 நின் பல் மா மாயப் * பல் பிறவியில் படிகின்ற யான் **
 தொல் மா வல்வினைத் * தொடர்களை முதல் அரிந்து *
 நின் மா தாள் சேர்ந்து * நிற்பது எஞ்ஞான்றுகொலோ? (2)

Pasuram 236 · corpus 3026

Pasuram 236

Study resources at Uveda
கொல்லா மாக்கோல் * கொலை செய்து பாரதப் போர் *
 எல்லாச் சேனையும் * இரு நிலத்து அவித்த எந்தாய் **
 பொல்லா ஆக்கையின் * புணர்வினை அறுக்கல் அறா *
 சொல்லாய் யான் உன்னைச் * சார்வது ஓர் சூழ்ச்சியே (3)

Pasuram 237 · corpus 3027

Pasuram 237

Study resources at Uveda
சூழ்ச்சி ஞானச் * சுடர் ஒளி ஆகி * என்றும்
 ஏழ்ச்சிக் கேடு இன்றி * எங்கணும் நிறைந்த எந்தாய் **
 தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து * நின் தாள் இணைக்கீழ் *
வாழ்ச்சி யான் சேரும் * வகை அருளாய் வந்தே (4)

Pasuram 238 · corpus 3028

Pasuram 238

Study resources at Uveda
வந்தாய் போலே * வந்தும் என் மனத்தினை நீ *
 சிந்தாமல் செய்யாய் * இதுவே இது ஆகில் **
 கொந்து ஆர்க் காயாவின் * கொழு மலர்த் திரு நிறத்த *
 எந்தாய் யான் உன்னை * எங்கு வந்து அணுகிற்பனே? (5)

Pasuram 239 · corpus 3029

Pasuram 239

Study resources at Uveda
கிற்பன் கில்லேன் * என்று இலன் முன நாளாய் *
 அற்ப சாரங்கள் * அவை சுவைத்து அகன்றொழிந்தேன் **
 பற்பல் ஆயிரம் * உயிர் செய்த பரமா * நின்
 நற்பொன் சோதித்தாள் * நணுகுவது எஞ்ஞான்றே? (6)

Pasuram 240 · corpus 3030

Pasuram 240

Study resources at Uveda
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து * இரங்கி நெஞ்சே *
 மெய்ஞ்ஞானம் இன்றி * வினை இயல் பிறப்பு அழுந்தி **
 எஞ்ஞான்றும் எங்கும் * ஒழிவு அற நிறைந்து நின்ற *
 மெய்ஞ் ஞானச் சோதிக் * கண்ணனை மேவுதுமே (7)

Pasuram 241 · corpus 3031

Pasuram 241

Study resources at Uveda
மேவு துன்ப வினைகளை * விடுத்துமிலேன் *
 ஓவுதல் இன்றி * உன் கழல் வணங்கிற்றிலேன் **
 பாவு தொல் சீர்க் கண்ணா * என் பரஞ்சுடரே *
 கூவுகின்றேன் காண்பான் * எங்கு எய்தக் கூவுவனே? (8)

Pasuram 242 · corpus 3032

Pasuram 242

Study resources at Uveda
கூவிக் கூவிக் * கொடுவினைத் தூற்றுள் நின்று *
 பாவியேன் பல காலம் * வழி திகைத்து அலமர்கின்றேன் **
 மேவி அன்று ஆ நிரை காத்தவன் * உலகம் எல்லாம் *
 தாவிய அம்மானை * எங்கு இனித் தலைப்பெய்வனே? (9)

Pasuram 243 · corpus 3033

Pasuram 243

Study resources at Uveda
தலைப்பெய் காலம் * நமன்தமர் பாசம் விட்டால் *
 அலைப்பூண் உண்ணும் * அவ் அல்லல் எல்லாம் அகல **
 கலைப் பல் ஞானத்து * என் கண்ணனைக் கண்டுகொண்டு *
 நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது * நீடு உயிரே (10)

Pasuram 244 · corpus 3034

Pasuram 244

Study resources at Uveda
உயிர்கள் எல்லா * உலகம் உடையவனை *
 குயில் கொள் சோலைத் * தென் குருகூர்ச் சடகோபன் **
 செயிர் இல் சொல் இசை மாலை * ஆயிரத்துள் இப் பத்தும் *
 உயிரின்மேல் ஆக்கை * ஊனிடை ஒழிவிக்குமே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.