This page preserves the source-defined decade 3, chapter 6 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
செய்ய தாமரைக் கண்ணன் * ஆய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர் *
வையம் வானம் மனிசர் தெய்வம் *
மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய் **
செய்ய சூழ் சுடர் ஞானம் ஆய் * வெளிப்
பட்டு இவை படைத்தான் * பின்னும்
மொய் கொள் சோதியோடு ஆயினான் * ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே (1)
மூவர் ஆகிய மூர்த்தியை * முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னை *
சாவம் உள்ளன நீக்குவானைத் *
தடங் கடல் கிடந்தான் தன்னை **
தேவ தேவனைத் தென் இலங்கை *
எரி எழச் செற்ற வில்லியை *
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் * பரவுமினோ (2)
பரவி வானவர் ஏத்த நின்ற *
பரமனைப் பரஞ்சோதியை *
குரவை கோத்த குழகனை * மணி
வண்ணனைக் குடக் கூத்தனை **
அரவம் ஏறி அலை கடல் அமரும் *
துயில்கொண்ட அண்ணலை *
இரவும் நன் பகலும் விடாது * என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ (3)
திரியும் காற்றோடு அகல் விசும்பு *
திணிந்த மண் கிடந்த கடல் *
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் *
மற்றும் மற்றும் முற்றும் ஆய் **
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் *
கண்ணன் விண்ணோர் இறை *
சுரியும் பல் கருங் குஞ்சி * எங்கள்
சுடர் முடி அண்ணல் தோற்றமே (5)
தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் *
அவன் ஒரு மூர்த்தியாய் *
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்
கீழ்ப் * புக நின்ற செங்கண்மால் **
நாற்றத் தோற்றத் சுவை ஒலி * உறல்
ஆகி நின்ற * எம் வானவர்
ஏற்றையே அன்றி * மற்றொருவரை
யான் இலேன் எழுமைக்குமே (6)
எழுமைக்கும் எனது ஆவிக்கு * இன்
அமுதத்தினை எனது ஆர் உயிர் *
கெழுமிய கதிர்ச் சோதியை * மணி
வண்ணனைக் குடக் கூத்தனை **
விழுமிய அமரர் முனிவர்
விழுங்கும் * கன்னல் கனியினை *
தொழுமின் தூய மனத்தர் ஆய் *
இறையும் நில்லா துயரங்களே (7)
துயரமே தரு துன்ப இன்ப
வினைகள் ஆய் * அவை அல்லன் ஆய் *
உயர நின்றது ஓர் சோதி ஆய் * உலகு
ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை **
அயர வாங்கும் நமன் தமர்க்கு * அரு
நஞ்சினை அச்சுதன் தன்னை *
தயரதற்கு மகன் தன்னை அன்றி *
மற்று இலேன் தஞ்சமாகவே (8)
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு *
தானும் ஆய் அவை அல்லன் ஆய் *
எஞ்சல் இல் அமரர் குலமுதல் *
மூவர் தம்முள்ளும் ஆதியை **
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் *
அவன் இவன் என்று கூழேன்மின் *
நெஞ்சினால் நினைப்பான் எவன் * அவன்
ஆகும் நீள் கடல் வண்ணனே (9)
கடல் வண்ணன் கண்ணன் * விண்ணவர்
கருமாணிக்கம் எனது ஆர் உயிர் *
பட அரவின் அணைக்கிடந்த *
பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் **
அட வரும் படை மங்க * ஐவர்கட்கு
ஆகி வெம் சமத்து * அன்று தேர்
கடவிய பெருமான் * கனை கழல்
காண்பது என்றுகொல் கண்களே (10)
கண்கள் காண்டற்கு அரியன்
ஆய்க் * கருத்துக்கு நன்றும் எளியன் ஆய் *
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம்
அருள் செய்யும் * வானவர் ஈசனை **
பண் கொள் சோலை வழுதி நாடன் *
குருகைக்கோன் சடகோபன் சொல் *
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் *
பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே (11)
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.