Pasuram 289 · corpus 3079
Pasuram 289
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப் * பங்கயக் கண்ணனை
பயில இனிய * நம் பாற்கடல் சேர்ந்த பரமனை **
பயிலும் திரு உடையார் * எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு * எம்மை ஆளும் பரமரே (1)
Nammazhvar · Pasurams 289–299
Corpus pasurams 3079–3089
This page preserves the source-defined decade 3, chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 289 · corpus 3079
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியைப் * பங்கயக் கண்ணனை
பயில இனிய * நம் பாற்கடல் சேர்ந்த பரமனை **
பயிலும் திரு உடையார் * எவரேலும் அவர் கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு * எம்மை ஆளும் பரமரே (1)
Pasuram 290 · corpus 3080
ஆளும் பரமனைக் கண்ணனை * ஆழிப் பிரான் தன்னை
தோளும் ஓர் நான்கு உடைத் * தூ மணி வண்ணன் எம்மான் தன்னை **
தாளும் தடக் கையும் கூப்பிப் * பணியும் அவர் கண்டீர்
நாளும் பிறப்பிடைதோறு * எம்மை ஆளுடை நாதரே (2)
Pasuram 291 · corpus 3081
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் * நறும் துழாய்ப் போதனை
பொன் நெடும் சக்கரத்து * எந்தை பிரான் தன்னை **
பாதம் பணிய வல்லாரைப் * பணியும் அவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு * எம்மை ஆளுடையார்களே (3)
Pasuram 292 · corpus 3082
உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் * உடை நாணினன்
புடை ஆர் பொன் நூலினன் * பொன் முடியன் மற்றும் பல்கலன் **
நடையா உடைத் திருநாரணன் * தொண்டர் தொண்டர் கண்டீர்
இடை ஆர் பிறப்பிடைதோறு * எமக்கு எம் பெருமக்களே (4)
Pasuram 293 · corpus 3083
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை * அமரர்கட்கு *
அருமை ஒழிய அன்று * ஆர் அமுது ஊட்டிய அப்பனை **
பெருமை பிதற்ற வல்லாரைப் * பிதற்றும் அவர் கண்டீர்
வருமையும் இம்மையும் * நம்மை அளிக்கும் பிராக்களே (5)
Pasuram 294 · corpus 3084
அளிக்கும் பரமனைக் கண்ணனை * ஆழிப் பிரான் தன்னை
துளிக்கும் நறும் கண்ணித் * தூ மணி வண்ணன் எம்மான் தன்னை **
ஒளிக் கொண்ட சோதியை * உள்ளத்துக் கொள்ளும் அவர் கண்டீர்
சலிப்பு இன்றி ஆண்டு எம்மைச் * சன்ம சன்மாந்தரம் காப்பரே (6)
Pasuram 295 · corpus 3085
சன்ம சன்மாந்தரம் காத்து * அடியார்களைக் கொண்டு போய்
தன்மை பெறுத்தித் * தன் தாளிணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை **
தொன்மை பிதற்ற வல்லாரைப் * பிதற்றும் அவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை * நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே (7)
Pasuram 296 · corpus 3086
நம்பனை ஞாலம் படைத்தவனைத் * திரு மார்பனை *
உம்பர் உலகினில் யார்க்கும் * உணர்வு அரியான் தன்னை **
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் * அவர் கண்டீர் *
எம் பல் பிறப்பிடைதோறு * எம் தொழுகுலம் தாங்களே (8)
Pasuram 297 · corpus 3087
குலம் தாங்கு சாதிகள் * நாலிலும் கீழ் இழிந்து
எத்தனை நலம் தான் இலாத * சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் **
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் * மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் * அடியார் தம் * அடியார் எம் அடிகளே (9)
Pasuram 298 · corpus 3088
அடி ஆர்ந்த வையம் உண்டு * ஆல் இலை அன்னவசம் செய்யும் *
படி யாதும் இல் குழவிப்படி * எந்தை பிரான் தனக்கு **
அடியார் அடியார் தம் * அடியார் அடியார் தமக்கு *
அடியார் அடியார் தம் * அடியார் அடியோங்களே (10)
Pasuram 299 · corpus 3089
அடி ஓங்கு நூற்றுவர் வீய * அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனை தென் குருகூர்ச் சடகோபன் * குற்றேவல்கள் **
அடி ஆர்ந்த ஆயிரத்துள் * இவை பத்து அவன் தொண்டர்மேல்
முடிவு ஆரக் கற்கிற்கில் * சன்மம் செய்யாமை முடியுமே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.