Pasuram 465 · corpus 3255
Pasuram 465
மாசு அறு சோதி * என் செய்ய வாய் மணிக்குன்றத்தை *
ஆசு அறு சீலனை * ஆதி மூர்த்தியை நாடியே **
பாசறவு எய்தி * அறிவு இழந்து எனை நாளையம்? *
ஏசு அறும் ஊரவர் கவ்வை * தோழீ என் செய்யுமே? (1)
Nammazhvar · Pasurams 465–475
Corpus pasurams 3255–3265
This page preserves the source-defined decade 5, chapter 3 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 465 · corpus 3255
மாசு அறு சோதி * என் செய்ய வாய் மணிக்குன்றத்தை *
ஆசு அறு சீலனை * ஆதி மூர்த்தியை நாடியே **
பாசறவு எய்தி * அறிவு இழந்து எனை நாளையம்? *
ஏசு அறும் ஊரவர் கவ்வை * தோழீ என் செய்யுமே? (1)
Pasuram 466 · corpus 3256
என் செய்யும் ஊரவர் கவ்வை * தோழீ இனி நம்மை? *
என் செய்ய தாமரைக் கண்ணன் * என்னை நிறை கொண்டான் **
முன் செய்ய மாமை இழந்து * மேனி மெலிவு எய்தி *
என் செய்ய வாயும் கருங் கண்ணும் * பயப்பு ஊர்ந்தவே (2)
Pasuram 467 · corpus 3257
ஊர்ந்த சகடம் * உதைத்த பாதத்தன் * பேய்முலை
சார்ந்து சுவைத்த * செவ்வாயன் என்னை நிறை கொண்டான் **
பேர்ந்தும் பெயர்ந்தும் * அவனோடு அன்றி ஓர் சொல் இலேன் *
தீர்ந்த என் தோழீ! * என் செய்யும் ஊரவர் கவ்வையே? (3)
Pasuram 468 · corpus 3258
ஊரவர் கவ்வை எரு இட்டு * அன்னை சொல் நீர் படுத்து *
ஈர நெல் வித்தி முளைத்த * நெஞ்சப் பெருஞ் செய்யுள் **
பேர் அமர் காதல் * கடல் புரைய விளைவித்த *
கார் அமர் மேனி * நம் கண்ணன் தோழீ! கடியனே (4)
Pasuram 469 · corpus 3259
கடியன் கொடியன் நெடிய மால் * உலகம் கொண்ட
அடியன் * அறிவு அரு மேனி மாயத்தன் ** ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் * அவன் என்றே கிடக்கும் எல்லே *
துடி கொள் இடை மடத் தோழீ! * அன்னை என் செய்யுமே? (5)
Pasuram 470 · corpus 3260
அன்னை என் செய்யில் என்? * ஊர் என் சொல்லில் என்? தோழிமீர் *
என்னை இனி உமக்கு * ஆசை இல்லை அகப்பட்டேன் **
முன்னை அமரர் முதல்வன் * வண் துவராபதி
மன்னன் * மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே (6)
Pasuram 471 · corpus 3261
வலையுள் அகப்படுத்து * என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு *
அலை கடல் பள்ளி அம்மானை * ஆழிப்பிரான் தன்னை **
கலை கொள் அகல் அல்குல் தோழீ * நம் கண்களால் கண்டு *
தலையில் வணங்கவும் ஆம் கொலோ * தையலார் முன்பே? (7)
Pasuram 472 · corpus 3262
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து * மருது இடைப்
போய் முதல் சாய்த்து * புள் வாய் பிளந்து களிறு அட்ட **
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை * எந் நாள்கொலோ *
யாம் உறுகின்றது தோழீ ** அன்னையர் நாணவே? (8)
Pasuram 473 · corpus 3263
நாணும் நிறையும் கவர்ந்து * என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு *
சேண் உயர் வானத்து இருக்கும் * தேவ பிரான் தன்னை **
ஆணை என் தோழீ! * உலகுதோறு அலர் தூற்றி! * ஆம்
கோணைகள் செய்து * குதிரியாய் மடல் ஊர்துமே (9)
Pasuram 474 · corpus 3264
யாம் மடல் ஊர்ந்தும் * எம் ஆழி அங்கைப் பிரான் உடை *
தூ மடல் தண் அம் துழாய் * மலர் கொண்டு சூடுவோம் **
யாம் மடம் இன்றித் தெருவுதோறு * அயல் தையலார் *
நா மடங்காப் பழி தூற்றி * நாடும் இரைக்கவே (10)
Pasuram 475 · corpus 3265
இரைக்கும் கருங் கடல் வண்ணன் * கண்ண பிரான் தன்னை *
விரைக் கொள் பொழில் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
நிரைக் கொள் அந்தாதி * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
உரைக்க வல்லார்க்கு * வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.