Pasuram 476 · corpus 3266
Pasuram 476
ஊர் எல்லாம் துஞ்சி * உலகு எல்லாம் நள் இருள் ஆய் *
நீர் எல்லாம் தேறி * ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால் **
பார் எல்லாம் உண்ட * நம் பாம்பு அணையான் வாரானால் *
ஆர் எல்லே வல்வினையேன் * ஆவி காப்பார் இனியே? (1)
Nammazhvar · Pasurams 476–486
Corpus pasurams 3266–3276
This page preserves the source-defined decade 5, chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 476 · corpus 3266
ஊர் எல்லாம் துஞ்சி * உலகு எல்லாம் நள் இருள் ஆய் *
நீர் எல்லாம் தேறி * ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால் **
பார் எல்லாம் உண்ட * நம் பாம்பு அணையான் வாரானால் *
ஆர் எல்லே வல்வினையேன் * ஆவி காப்பார் இனியே? (1)
Pasuram 477 · corpus 3267
ஆவி காப்பார் இனி யார்? * ஆழ் கடல் மண் விண் மூடி *
மா விகாரம் ஆய் * ஓர் வல் இரவு ஆய் நீண்டதால் **
காவி சேர் வண்ணன் * என் கண்ணனும் வாரானால் *
பாவியேன் நெஞ்சமே * நீயும் பாங்கு அல்லையே (2)
Pasuram 478 · corpus 3268
நீயும் பாங்கு அல்லைகாண் * நெஞ்சமே நீள் இரவும் *
ஓயும் பொழுது இன்றி * ஊழி ஆய் நீண்டதால் *
காயும் கடும் சிலை * என் காகுத்தன் வாரானால் *
மாயும் வகை அறியேன் * வல்வினையேன் பெண் பிறந்தே * (3)
Pasuram 479 · corpus 3269
பெண் பிறந்தார் எய்தும் * பெரும் துயர் காண்கிலேன் என்று *
ஒண் சுடரோன் * வாராது ஒளித்தான் ** இம் மண் அளந்த
கண் பெரிய செவ்வாய் * எம் கார் ஏறு வாரானால் *
எண் பெரிய சிந்தை நோய் * தீர்ப்பார் ஆர் என்னையே? (4)
Pasuram 480 · corpus 3270
ஆர் என்னை ஆராய்வார்? * அன்னையரும் தோழியரும் *
நீர் என்னே என்னாதே * நீள் இரவும் துஞ்சுவரால் **
கார் அன்ன மேனி * நம் கண்ணனும் வாரானால் *
பேர் என்னை மாயாதால் * வல்வினையேன் பின் நின்றே (5)
Pasuram 481 · corpus 3271
பின்நின்று காதல் நோய் * நெஞ்சம் பெரிது அடுமால் *
முன்நின்று இரா ஊழி * கண் புதைய மூடிற்றால் **
மன் நின்ற சக்கரத்து * எம் மாயவனும் வாரானால் *
இந் நின்ற நீள் ஆவி * காப்பார் ஆர் இவ் இடத்தே? * (6)
Pasuram 482 · corpus 3272
காப்பார் ஆர் இவ் இடத்து? * கங்கு இருளின் நுண் துளி ஆய் *
சேண் பாலது ஊழி ஆய் * செல்கின்ற கங்குல்வாய் **
தூப் பால வெண் சங்கு * சக்கரத்தன் தோன்றானால் *
தீப் பால வல்வினையேன் * தெய்வங்காள் என் செய்கேனோ? (7)
Pasuram 483 · corpus 3273
தெய்வங்காள் என் செய்கேன்? * ஓர் இரவு ஏழ் ஊழி ஆய் *
மெய் வந்து நின்று * எனது ஆவி மெலிவிக்கும் **
கைவந்த சக்கரத்து * என் கண்ணனும் வாரானால் *
தைவந்த தண் தென்றல் * வெம் சுடரில் தான் அடுமே * (8)
Pasuram 484 · corpus 3274
வெம் சுடரில் தான் அடுமால் * வீங்கு இருளின் நுண் துளி ஆய் *
அம் சுடர வெய்யோன் * அணி நெடும் தேர் தோன்றாதால் **
செஞ் சுடர்த் தாமரைக்கண் * செல்வனும் வாரானால் *
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார்? நின்று உருகுகின்றேனே * (9)
Pasuram 485 · corpus 3275
நின்று உருகுகின்றேனே போல * நெடு வானம் *
சென்று உருகி நுண் துளி ஆய்ச் * செல்கின்ற கங்குல்வாய் **
அன்று ஒருகால் வையம் * அளந்த பிரான் வாரான் என்று *
ஒன்று ஒருகால் சொல்லாது * உலகோ உறங்குமே (10) *
Pasuram 486 · corpus 3276
உறங்குவான் போல் * யோகுசெய்த பெருமானை *
சிறந்த பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் சொல் **
நிறம் கிளர்ந்த அந்தாதி * ஆயிரத்துள் இப் பத்தால் *
இறந்து போய் வைகுந்தம் * சேராவாறு எங்ஙனேயோ? * (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.