Pasuram 641 · corpus 3431
Pasuram 641
நீர் ஆய் நிலன் ஆய்த் * தீ ஆய் கால் ஆய் நெடு வான் ஆய்க் *
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய்ச் * சிவன் ஆய் அயன் ஆனாய் **
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்திக் * கொடியேன்பால்
வாராய் * ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே (1)
Nammazhvar · Pasurams 641–651
Corpus pasurams 3431–3441
This page preserves the source-defined decade 6, chapter 9 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 641 · corpus 3431
நீர் ஆய் நிலன் ஆய்த் * தீ ஆய் கால் ஆய் நெடு வான் ஆய்க் *
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய்ச் * சிவன் ஆய் அயன் ஆனாய் **
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்திக் * கொடியேன்பால்
வாராய் * ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே (1)
Pasuram 642 · corpus 3432
மண்ணும் விண்ணும் மகிழக் * குறள் ஆய் வலம் காட்டி *
மண்ணும் விண்ணும் கொண்ட * மாய அம்மானே **
நண்ணி உனை நான் * கண்டு உகந்து கூத்தாட *
நண்ணி ஒருநாள் * ஞாலத்தூடே நடவாயே (2)
Pasuram 643 · corpus 3433
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் * கிடந்து இருந்தும் *
சாலப் பல நாள் * உகம்தோறு உயிர்கள் காப்பானே **
கோலத் திரு மா மகளோடு * உன்னைக் கூடாதே *
சாலப் பல நாள் * அடியேன் இன்னம் தளர்வேனோ? (3)
Pasuram 644 · corpus 3434
தளர்ந்தும் முறிந்தும் * சகட அசுரர் உடல் வேறா *
பிளந்து வீயத் * திருக்கால் ஆண்ட பெருமானே **
கிளர்ந்து பிரமன் சிவன் * இந்திரன் விண்ணவர் சூழ *
விளங்க ஒருநாள் * காண வாராய் விண்மீதே (4)
Pasuram 645 · corpus 3435
விண்மீது இருப்பாய் மலைமேல் நிற்பாய் * கடல் சேர்ப்பாய் *
மண்மீது உழல்வாய் * இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் **
எண்மீது இயன்ற புற அண்டத்தாய் * எனது ஆவி *
உள் மீது ஆடி * உருக் காட்டாதே ஒளிப்பாயோ? (5)
Pasuram 646 · corpus 3436
பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ்ப் * பரவை நிலம் எல்லாம்
தாய் * ஓர் அடியால் * எல்லா உலகும் தடவந்த
மாயோன் ** உன்னைக் காண்பான் * வருந்தி எனைநாளும் *
தீயோடு உடன்சேர் மெழுகாய் * உலகில் திரிவேனோ? (6)
Pasuram 647 · corpus 3437
உலகில் திரியும் கரும கதி ஆய் * உலகம் ஆய் *
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் * புற அண்டத்து **
அலகில் பொலிந்த * திசை பத்து ஆய அருவேயோ *
அலகில் பொலிந்த * அறிவிலேனுக்கு அருளாயே (7)
Pasuram 648 · corpus 3438
அறிவிலேனுக்கு அருளாய் * அறிவார் உயிர் ஆனாய் *
வெறி கொள் சோதி மூர்த்தி * அடியேன் நெடுமாலே **
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு * இன்னம் கெடுப்பாயோ *
பிறிது ஒன்று அறியா அடியேன் * ஆவி திகைக்கவே? (8)
Pasuram 649 · corpus 3439
ஆவி திகைக்க * ஐவர் குமைக்கும் சிற்றின்பம் *
பாவியேனைப் * பல நீ காட்டிப் படுப்பாயோ? **
தாவி வையம் கொண்ட * தடம் தாமரை கட்கே *
கூவிக் கொள்ளும் காலம் * இன்னம் குறுகாதோ? (9)
Pasuram 650 · corpus 3440
குறுகா நீளா * இறுதிகூடா எனை ஊழி *
சிறுகா பெருகா * அளவு இல் இன்பம் சேர்ந்தாலும் **
மறு கால் இன்றி மாயோன் * உனக்கே ஆளாகும் *
சிறு காலத்தை உறுமோ * அந்தோ தெரியிலே? (10)
Pasuram 651 · corpus 3441
தெரிதல் நினைதல் * எண்ணல் ஆகாத் திருமாலுக்கு *
உரிய தொண்டர் தொண்டர் * தொண்டன் சடகோபன் **
தெரியச் சொன்ன * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
உரிய தொண்டர் ஆக்கும் * உலகம் உண்டாற்கே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.