Corpus pasurams 3420–3430

This page preserves the source-defined decade 6, chapter 8 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 630 · corpus 3420

Pasuram 630

Study resources at Uveda
பொன் உலகு ஆளீரோ * புவனி முழுது ஆளீரோ? *
 நல் நலப் புள்ளினங்காள் * வினையாட்டியேன் நான் இரந்தேன் **
 முன் உலகங்கள் எல்லாம் படைத்த * முகில்வண்ணன் கண்ணன் *
 என் நலம் கொண்ட பிரான் தனக்கு * என் நிலைமை உரைத்தே (1)

Pasuram 631 · corpus 3421

Pasuram 631

Study resources at Uveda
மை அமர் வாள் நெடும் கண் * மங்கைமார் முன்பு என் கை இருந்து *
 நெய் அமர் இன் அடிசில் * நிச்சல் பாலொடு மேவீரோ **
 கை அமர் சக்கரத்து * என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு *
 மெய் அமர் காதல் சொல்லிக் * கிளிகாள் விரைந்து ஓடிவந்தே (2)

Pasuram 632 · corpus 3422

Pasuram 632

Study resources at Uveda
ஓடிவந்து என் குழல்மேல் * ஒளி மா மலர் ஊதீரோ *
 கூடிய வண்டினங்காள் * குருநாடு உடை ஐவர்கட்கு ஆய் **
 ஆடிய மா நெடும் தேர்ப்படை * நீறு எழச் செற்ற பிரான் *
 சூடிய தண் துளவம் உண்ட * தூ மது வாய்கள் கொண்டே (3)

Pasuram 633 · corpus 3423

Pasuram 633

Study resources at Uveda
தூ மது வாய்கள் கொண்டுவந்து * என் முல்லைகள்மேல் தும்பிகாள் *
 பூ மது உண்ணச் செல்லில் * வினையேனைப் பொய்செய்து அகன்ற **
 மா மது வார் தண் துழாய் முடி * வானவர் கோனைக் கண்டு *
 யாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும் * கண்டீர் நுங்கட்கே? (4)

Pasuram 634 · corpus 3424

Pasuram 634

Study resources at Uveda
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் * யான் வளர்த்த கிளிகாள் *
 வெம் கண் புள் ஊர்ந்து வந்து * வினையேனை நெஞ்சம் கவர்ந்த **
 செங்கண் கருமுகிலைச் * செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை *
 எங்குச் சென்றாகிலும் கண்டு * இதுவோ தக்கவாறு? என்மினே (5)

Pasuram 635 · corpus 3425

Pasuram 635

Study resources at Uveda
என் மின்னு நூல் மார்வன் * என் கரும் பெருமான் என் கண்ணன் *
 தன் மன்னு நீள் கழல்மேல் * தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் **
 கல்மின்கள் என்று உம்மை யான் * கற்பியாவைத்த மாற்றம்சொல்லி *
 செல்மின்கள் தீவினையேன் * வளர்த்த சிறு பூவைகளே (6)

Pasuram 636 · corpus 3426

Pasuram 636

Study resources at Uveda
பூவைகள் போல் நிறத்தன் * புண்டரீகங்கள் போலும் கண்ணன் *
 யாவையும் யாவரும் ஆய் * நின்ற மாயன் என் ஆழிப் பிரான் **
 மாவை வல் வாய் பிளந்த * மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி *
 பாவைகள் தீர்க்கிற்றிரே * வினையாட்டியேன் பாசறவே? (7)

Pasuram 637 · corpus 3427

Pasuram 637

Study resources at Uveda
பாசறவு எய்தி இன்னே * வினையேன் எனை ஊழி நைவேன் *
 ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே * அருள்செய்து ஒருநாள் **
 மாசு அறு நீலச் சுடர் முடி * வானவர் கோனைக் கண்டு *
 ஏசு அறும் நும்மை அல்லால் * மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே (8)

Pasuram 638 · corpus 3428

Pasuram 638

Study resources at Uveda
பேர்த்து மற்று ஓர் களைகண் * வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் *
 நீர்த் திரைமேல் உலவி * இரை தேரும் புதா இனங்காள் **
 கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் * விண்ணவர் கோனைக் கண்டு *
 வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் * வைகல் வந்திருந்தே (9)

Pasuram 639 · corpus 3429

Pasuram 639

Study resources at Uveda
வந்திருந்து உம்முடைய * மணிச் சேவலும் நீரும் எல்லாம் *
 அந்தரம் ஒன்றும் இன்றி * அலர்மேல் அசையும் அன்னங்காள் **
 என் திரு மார்வற்கு என்னை * இன்னவாறு இவள் காண்மின் என்று *
 மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் * மறுமாற்றங்களே (10)

Pasuram 640 · corpus 3430

Pasuram 640

Study resources at Uveda
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு * மதுசூத பிரான் அடிமேல் *
 நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
 தோற்றங்கள் ஆயிரத்துள் * இவையும் ஒருபத்தும் வல்லார் *
 ஊற்றின்கண் நுண் மணல் போல் * உருகாநிற்பர் நீராயே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.