Corpus pasurams 3453–3463

This page preserves the source-defined decade 7, chapter 1 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 663 · corpus 3453

Pasuram 663

Study resources at Uveda
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி * என்னை உன் பாதபங்கயம் *
 நண்ணிலாவகையே * நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் **
 எண் இலாப் பெரு மாயனே! இமையோர்கள் ஏத்தும் * உலகம் மூன்று உடை *
 அண்ணலே அமுதே அப்பனே * என்னை ஆள்வானே (1)

Pasuram 664 · corpus 3454

Pasuram 664

Study resources at Uveda
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து * இராப்பகல் மோதுவித்திட்டு *
 உன்னை நான் அணுகாவகை * செய்து போதிகண்டாய் **
 கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே! * கடல் ஞாலம் காக்கின்ற *
 மின்னு நேமியினாய் * வினையேனுடை வேதியனே (2)

Pasuram 665 · corpus 3455

Pasuram 665

Study resources at Uveda
வேதியாநிற்கும் ஐவரால் * வினையேனை மோதுவித்து * உன் திருவடிச்
 சாதியாவகை * நீ தடுத்து என் பெறுதி? அந்தோ! **
 ஆதி ஆகி அகல் இடம் படைத்து * உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட *
 சோதி நீள் முடியாய் * தொண்டனேன் மதுசூதனனே (3)

Pasuram 666 · corpus 3456

Pasuram 666

Study resources at Uveda
சூது நான் அறியாவகை * சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி * உன் அடிப்
 போது நான் அணுகாவகை * செய்து போதிகண்டாய் **
 யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி * ஓர் ஆலின் நீள் இலை *
 மீது சேர் குழவி * வினையேன் வினைதீர் மருந்தே (4)

Pasuram 667 · corpus 3457

Pasuram 667

Study resources at Uveda
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் * செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை *
 நேர் மருங்கு உடைத்தா அடைத்து * நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் **
 ஆர் மருந்து இனி ஆகுவார் * அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் *
 வேர் மருங்கு அறுத்தாய் * விண்ணுளார் பெருமானே ஓ! (5)

Pasuram 668 · corpus 3458

Pasuram 668

Study resources at Uveda
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் * ஐம்புலன் இவை *
 மண்ணுள் என்னைப் பெற்றால் * என் செய்யா மற்று நீயும் விட்டால்? **
 பண்ணுளாய் கவி தன்னுளாய் * பத்தியின் உள்ளாய்! பரமீசனே * வந்து என்
 கண்ணுளாய் நெஞ்சுளாய்! * சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே (6)

Pasuram 669 · corpus 3459

Pasuram 669

Study resources at Uveda
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத * ஓர் ஐவர் வன் கயவரை *
 என்று யான் வெல்கிற்பன் * உன் திருவருள் இல்லையேல்? **
 அன்று தேவர் அசுரர் வாங்க * அலைகடல் அரவம் அளாவி * ஓர்
 குன்றம் வைத்த எந்தாய்! * கொடியேன் பருகு இன் அமுதே! (7)

Pasuram 670 · corpus 3460

Pasuram 670

Study resources at Uveda
இன் அமுது எனத் தோன்றி * ஓர் ஐவர் யாவரையும் மயக்க * நீ வைத்த
 முன்னம் மாயம் எல்லாம் * முழு வேர் அரிந்து ** என்னை உன்
 சின்னமும் திரு மூர்த்தியும் * சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு *
 என் அம்மா என் கண்ணா * இமையோர் தம் குலமுதலே (8)

Pasuram 671 · corpus 3461

Pasuram 671

Study resources at Uveda
குலம் முதல் அடும் தீவினைக் * கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை *
 வலம் முதல் கெடுக்கும் * வரமே தந்தருள்கண்டாய் **
 நிலம் முதல் இனி எவ் உலகுக்கும் * நிற்பன செல்வன என * பொருள்
 பல முதல் படைத்தாய் * என் கண்ணா என் பரஞ்சுடரே (9)

Pasuram 672 · corpus 3462

Pasuram 672

Study resources at Uveda
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி * உன் இணைத் தாமரைகட்கு *
 அன்பு உருகி நிற்கும் * அது நிற்கச் சுமடு தந்தாய் **
 வன் பரங்கள் எடுத்து ஐவர் * திசை திசை வலித்து எற்றுகின்றனர் *
 முன் பரவை கடைந்து * அமுதம் கொண்ட மூர்த்தி ஓ (10)

Pasuram 673 · corpus 3463

Pasuram 673

Study resources at Uveda
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் * குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும் * அப்
 புண்டரீகக் கொப்பூழ்ப் * புனல் பள்ளி அப்பனுக்கே **
 தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் * சடகோபன் சொல் ஆயிரத்துள் இப் பத்தும் *
 கண்டு பாட வல்லார் * வினை போம் கங்குலும் பகலே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.