This page preserves the source-defined decade 8, chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
வார் கடா அருவி யானை மா மலையின் *
மருப்பு இணைக் குவடு இறுத்து உருட்டி *
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து * அரங்கின்
மல்லரைக் கொன்று சூழ் பரண்மேல் **
போர் கடா அரசர் புறக்கிட * மாட
மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த *
சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே (1)
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் *
இரு நிலம் இடந்த எம் பெருமான் *
முன்னை வல் வினைகள் முழுது உடன் மாள *
என்னை ஆள்கின்ற எம் பெருமான் **
தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாற்றங்கரை மீபால் நின்ற எம் பெருமான் *
அடி அல்லால் சரண் நினைப்பிலும் *
பிறிது இல்லை எனக்கே (3)
பிறிது இல்லை எனக்குப் பெரிய மூவுலகும் *
நிறையப் பேர் உருவமாய் நிமிர்ந்த *
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த *
கோல மாணிக்கம் என் அம்மான் **
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் *
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய * மெய்ம்மையே நின்ற எம் பெருமான் *
அடிஇணை அல்லது ஓர் அரணே (4)
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை *
அது பொருள் ஆகிலும் * அவனை
அல்லது என் ஆவி அமர்ந்துஅணைகில்லாது *
ஆதலால் அவன் உறைகின்ற **
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த *
நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும் *
நல்ல நீள் மாடத் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே (5)
எனக்கு நல் அரணை எனது ஆர் உயிரை *
இமையவர் தந்தை தாய் தன்னை *
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானைத் *
தடம் கடல் பள்ளி அம்மானை **
மனக்கொள் சீர் மூவாயிரவர் * வண் சிவனும்
அயனும் தானும் ஒப்பார் வாழ் *
கனக்கொள் திண் மாடத் திருச்செங்குன்றூரில் *
திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே (6)
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்
கண்ட * அத் திருவடி என்றும் *
திருச் செய்ய கமலக் கண்ணும் * செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும் **
திருச் செய்ய கமல உந்தியும் * செய்ய
கமலை மார்பும் செய்ய உடையும் *
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் *
திகழ என் சிந்தையுளானே (7)