Pasuram 795 · corpus 3585
Pasuram 795
அங்கும் இங்கும் * வானவர் தானவர் * யாவரும்
எங்கும் இணையை என்று * உன்னை அறியகிலாது அலற்றி **
அங்கம் சேரும் * பூமகள் மண்மகள் ஆய்மகள் *
சங்கு சக்கரக் கையவன் என்பர் * சரணமே (1)
Nammazhvar · Pasurams 795–805
Corpus pasurams 3585–3595
This page preserves the source-defined decade 8, chapter 3 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 795 · corpus 3585
அங்கும் இங்கும் * வானவர் தானவர் * யாவரும்
எங்கும் இணையை என்று * உன்னை அறியகிலாது அலற்றி **
அங்கம் சேரும் * பூமகள் மண்மகள் ஆய்மகள் *
சங்கு சக்கரக் கையவன் என்பர் * சரணமே (1)
Pasuram 796 · corpus 3586
சரணம் ஆகிய * நான்மறை நூல்களும் சாராதே *
மரணம் தோற்றம் * வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம் **
கரணப் பல் படை * பற்று அற ஓடும் கனல் ஆழி *
அரணத் திண் படை ஏந்திய * ஈசற்கு ஆளாயே (2)
Pasuram 797 · corpus 3587
ஆளும் ஆளார் ஆழியும் * சங்கும் சுமப்பார் தாம் *
வாளும் வில்லும் கொண்டு * பின் செல்வார் மற்று இல்லை **
தாளும் தோளும் * கைகளை ஆரத் தொழக் காணேன் *
நாளும் நாளும் நாடுவன் * அடியேன் ஞாலத்தே (3)
Pasuram 798 · corpus 3588
ஞாலம் போனகம் பற்றி * ஓர் முற்றா உரு ஆகி *
ஆலம் பேர் இலை * அன்னவசம் செய்யும் அம்மானே **
காலம் பேர்வது ஓர் * கார் இருள் ஊழி ஒத்து உளதால் * உன்
கோலம் கார் எழில் * காணலுற்று ஆழும் கொடியேற்கே (4)
Pasuram 799 · corpus 3589
கொடியார் மாடக் * கோளூர் அகத்தும் புளியங்குடியும் *
மடியாது இன்னே * நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் **
அடியார் அல்லல் தவிர்த்த * அசைவோ? அன்றேல் * இப்
படி தான் நீண்டு தாவிய * அசைவோ? பணியாயே (5)
Pasuram 800 · corpus 3590
பணியா அமரர் * பணிவும் பண்பும் தாமே ஆம் *
அணி ஆர் ஆழியும் * சங்கமும் ஏந்தும் அவர் காண்மின் **
தணியா வெம் நோய் * உலகில் தவிர்ப்பான் * திருநீல
மணி ஆர் மேனியோடு * என் மனம் சூழ வருவாரே (6)
Pasuram 801 · corpus 3591
வருவார் செல்வார் * வண்பரிசாரத்து இருந்த * என்
திருவாழ் மார்வற்கு * என் திறம் சொல்லார் செய்வது என் **
உரு ஆர் சக்கரம் * சங்கு சுமந்து இங்கு உம்மோடு *
ஒருபாடு உழல்வான் * ஓர் அடியானும் உளன் என்றே? (7)
Pasuram 802 · corpus 3592
என்றே என்னை * உன் ஏர் ஆர் கோலத் திருந்து அடிக்கீழ் *
நின்றே ஆட்செய்ய * நீ கொண்டருள நினைப்பதுதான்? **
குன்று ஏழ் பார் ஏழ் * சூழ் கடல் ஞாலம் முழு ஏழும் *
நின்றே தாவிய * நீள் கழல் ஆழித் திருமாலே (8)
Pasuram 803 · corpus 3593
திருமால் நான்முகன் * செஞ்சடையான் என்று இவர்கள் * எம்
பெருமான் தன்மையை * யார் அறிகிற்பார்? பேசி என்? **
ஒரு மா முதல்வா * ஊழிப் பிரான் என்னை ஆளுடை *
கரு மா மேனியன் என்பன் * என் காதல் கலக்கவே (9)
Pasuram 804 · corpus 3594
கலக்கம் இல்லா * நல் தவ முனிவர் கரை கண்டோர் *
துளக்கம் இல்லா * வானவர் எல்லாம் தொழுவார்கள் **
மலக்கம் எய்த * மா கடல் தன்னைக் கடைந்தானை *
உலக்க நாம் புகழ்கிற்பது * என் செய்வது? உரையீரே? (10)
Pasuram 805 · corpus 3595
உரையா வெம் நோய் தவிர * அருள் நீள் முடியானை *
வரை ஆர் மாடம் * மன்னு குருகூர்ச் சடகோபன் **
உரை ஏய் சொல்தொடை * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
நிரையே வல்லார் * நீடு உலகத்துப் பிறவாரே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.