Pasuram 828 · corpus 3618
Pasuram 828
எல்லியும் காலையும் * தன்னை நினைந்து எழ *
நல்ல அருள்கள் * நமக்கே தந்து அருள் செய்வான் **
அல்லி அம் தண் அம் துழாய் * முடி அப்பன் ஊர் *
செல்வர்கள் வாழும் * திருக்கடித்தானமே (1)
Nammazhvar · Pasurams 828–838
Corpus pasurams 3618–3628
This page preserves the source-defined decade 8, chapter 6 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 828 · corpus 3618
எல்லியும் காலையும் * தன்னை நினைந்து எழ *
நல்ல அருள்கள் * நமக்கே தந்து அருள் செய்வான் **
அல்லி அம் தண் அம் துழாய் * முடி அப்பன் ஊர் *
செல்வர்கள் வாழும் * திருக்கடித்தானமே (1)
Pasuram 829 · corpus 3619
திருக்கடித்தானமும் * என்னுடையச் சிந்தையும் *
ஒருக்கடுத்து உள்ளே * உறையும் பிரான் கண்டீர் **
செருக் கடுத்து அன்று * திகைத்த அரக்கரை *
உருக் கெட வாளி * பொழிந்த ஒருவனே (2)
Pasuram 830 · corpus 3620
ஒருவர் இருவர் ஓர் * மூவர் என நின்று *
உருவு கரந்து ** உள்ளும்தோறும் தித்திப்பான் **
திரு அமர் மார்வன் * திருக்கடித்தானத்தை *
மருவி உறைகின்ற * மாயப் பிரானே (3)
Pasuram 831 · corpus 3621
மாயப் பிரான் * என வல்வினை மாய்ந்து அற *
நேசத்தினால் நெஞ்சம் * நாடு குடிகொண்டான் **
தேசத்து அமரர் * திருக்கடித்தானத்தை *
வாசப் பொழில் மன்னு * கோயில் கொண்டானே (4)
Pasuram 832 · corpus 3622
கோயில் கொண்டான் தன் * திருக்கடித்தானத்தை *
கோயில் கொண்டான் * அதனோடும் என் நெஞ்சகம்; **
கோயில்கொள் * தெய்வம் எல்லாம் தொழ * வைகுந்தம்
கோயில் கொண்ட * குடக்கூத்த அம்மானே (5)
Pasuram 833 · corpus 3623
கூத்த அம்மான் * கொடியேன் இடர் முற்றவும் *
மாய்த்த அம்மான் * மதுசூத அம்மான் உறை **
பூத்த பொழில் தண் * திருக்கடித்தானத்தை *
ஏத்த நில்லா * குறிக்கொள்மின் இடரே (6)
Pasuram 834 · corpus 3624
கொள்மின் இடர் கெட * உள்ளத்துக் கோவிந்தன் *
மண் விண் முழுதும் * அளந்த ஒண் தாமரை **
மண்ணவர் தாம் தொழ * வானவர் தாம் வந்து *
நண்ணு திருக்கடித்தான நகரே (7)
Pasuram 835 · corpus 3625
தான நகர்கள் * தலைச்சிறந்து எங்கெங்கும் *
வான் இந் நிலம் கடல் * முற்றும் எம் மாயற்கே **
ஆனவிடத்தும் என் நெஞ்சும் * திருக்கடித்
தான நகரும் * தன தாயப் பதியே (8)
Pasuram 836 · corpus 3626
தாயப் பதிகள் * தலைச்சிறந்து எங்கெங்கும் *
மாயத்தினால் மன்னி * வீற்றிருந்தான் உறை **
தேசத்து அமரர் * திருக்கடித்தானத்துள் *
ஆயர்க்கு அதிபதி * அற்புதன் தானே (9)
Pasuram 837 · corpus 3627
அற்புதன் நாராயணன் * அரி வாமனன் *
நிற்பது மேவி * இருப்பது என் நெஞ்சகம் **
நல் புகழ் வேதியர் * நான்மறை நின்று அதிர் *
கற்பகச் சோலைத் * திருக்கடித்தானமே (10)
Pasuram 838 · corpus 3628
சோலைத் திருக்கடித்தானத்து * உறை திரு
மாலை * மதிள் குருகூர்ச் சடகோபன் சொல் **
பாலோடு அமுது அன்ன * ஆயிரத்து இப் பத்தும் *
மேலை வைகுந்தத்து * இருத்தும் வியந்தே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.