Pasuram 839 · corpus 3629
Pasuram 839
இருத்தும் வியந்து என்னைத் * தன் பொன் அடிக்கீழ் என்று *
அருத்தித்து எனைத்து ஓர் * பல நாள் அழைத்தேற்கு **
பொருத்தம் உடை * வாமனன் தான் புகுந்து * என் தன்
கருத்தை உற * வீற்றிருந்தான் கண்டு கொண்டே (1)
Nammazhvar · Pasurams 839–849
Corpus pasurams 3629–3639
This page preserves the source-defined decade 8, chapter 7 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 839 · corpus 3629
இருத்தும் வியந்து என்னைத் * தன் பொன் அடிக்கீழ் என்று *
அருத்தித்து எனைத்து ஓர் * பல நாள் அழைத்தேற்கு **
பொருத்தம் உடை * வாமனன் தான் புகுந்து * என் தன்
கருத்தை உற * வீற்றிருந்தான் கண்டு கொண்டே (1)
Pasuram 840 · corpus 3630
இருந்தான் கண்டுகொண்டு * எனது ஏழை நெஞ்சு ஆளும் *
திருந்தாத ஓர் ஐவரைத் * தேய்ந்து அற மன்னி **
பெரும் தாள் களிற்றுக்கு * அருள்செய்த பெருமான் *
தரும் தான் அருள் தான் * இனி யான் அறியேனே (2)
Pasuram 841 · corpus 3631
அருள் தான் இனி யான் அறியேன் * அவன் என் உள் *
இருள் தான் அற * வீற்றிருந்தான் இது அல்லால் **
பொருள் தான் எனில் * மூவுலகும் பொருள் அல்ல *
மருள் தான் ஈதோ? * மாய மயக்கு மயக்கே? (3)
Pasuram 842 · corpus 3632
மாய மயக்கு மயக்கான் * என்னை வஞ்சித்து *
ஆயன் அமரர்க்கு * அரிஏறு எனது அம்மான் **
தூய சுடர்ச்சோதி * தனது என் உள் வைத்தான் *
தேசம் திகழும் * தன் திருவருள் செய்தே (4)
Pasuram 843 · corpus 3633
திகழும் தன் திருவருள் செய்து * உலகத்தார்
புகழும் புகழ் * தான் அது காட்டித் தந்து ** என் உள்
திகழும் * மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் *
புகழும் புகழ் * மற்று எனக்கும் ஓர் பொருளே? (5)
Pasuram 844 · corpus 3634
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் * சீர்க்கத்
தருமேல் * பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் **
கரு மாணிக்கக் குன்றத்துத் * தாமரைபோல் *
திரு மார்பு கால் கண் கை * செவ்வாய் உந்தியானே? (6)
Pasuram 845 · corpus 3635
செவ்வாய் உந்தி * வெண் பல் சுடர்க் குழை தம்மோடு *
எவ்வாய்ச் சுடரும் * தம்மில் முன் வளாய்க்கொள்ள **
செவ்வாய் முறுவலோடு * எனது உள்ளத்து இருந்த **
அவ்வாய் அன்றி * யான் அறியேன் மற்று அருளே (7)
Pasuram 846 · corpus 3636
அறியேன் மற்று அருள் * என்னை ஆளும் பிரானார் *
வெறிதே அருள்செய்வர் * செய்வார்கட்கு உகந்து **
சிறியேனுடைச் * சிந்தையுள் மூவுலகும் * தன்
நெறியா வயிற்றில் கொண்டு * நின்றொழிந்தாரே (8)
Pasuram 847 · corpus 3637
வயிற்றில் கொண்டு * நின்றொழிந்தாரும் எவரும் *
வயிற்றில் கொண்டு * நின்று ஒரு மூவுலகும் ** தம்
வயிற்றில் கொண்டு * நின்றவண்ணம் நின்ற மாலை *
வயிற்றில் கொண்டு * மன்ன வைத்தேன் மதியாலே (9)
Pasuram 848 · corpus 3638
வைத்தேன் மதியால் * எனது உள்ளத்து அகத்தே *
எய்த்தே ஒழிவேன் அல்லேன் * என்றும் எப்போதும் **
மொய்த்து ஏய் திரை * மோது தண் பாற்கடலுளால் *
பைத்து ஏய் சுடர்ப் பாம்பு அணை * நம் பரனையே (10)
Pasuram 849 · corpus 3639
சுடர்ப் பாம்பு அணை நம் பரனைத் * திருமாலை *
அடிச் சேர்வகை * வண் குருகூர்ச் சடகோபன் **
முடிப்பான் சொன்ன ஆயிரத்து * இப் பத்தும் சன்மம்
விடத் * தேய்ந்து அற நோக்கும் * தன் கண்கள் சிவந்தே (11)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.