Corpus pasurams 2478–2487

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1 · corpus 2478

Pasuram 1

Study resources at Uveda
பொய்ந் நின்ற ஞானமும் * பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் *
இந் நின்ற நீர்மை * இனி யாம் உறாமை **
உயிர் அளிப்பான் எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் * இமையோர் தலைவா! *
மெய்ந் நின்று கேட்டருளாய் * அடியேன் செய்யும் விண்ணப்பமே1

Pasuram 2 · corpus 2479

Pasuram 2

Study resources at Uveda
செழு நீர்த் தடத்துக் * கயல் மிளிர்ந்தால் ஒப்ப * சேயரிக் கண்
 அழு நீர் துளும்ப அலமருகின்றன ** வாழியரோ!
 முழு நீர் முகில் வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவர் ஆம் *
 தொழுநீர் இணை அடிக்கே * அன்பு சூட்டிய சூழ் குழற்கே2

Pasuram 3 · corpus 2480

Pasuram 3

Study resources at Uveda
குழல் கோவலர் மடப் பாவையும் * மண்மகளும் * திருவும்
 நிழல்போல்வனர் கண்டு * நிற்கும்கொல் மீளும்கொல் ** தண் அம் துழாய்
 அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழக் கடவும் *
 தழல் போல் சினத்த * அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே?3

Pasuram 4 · corpus 2481

Pasuram 4

Study resources at Uveda
தனி நெஞ்சம் முன் அவர் * புள்ளே கவர்ந்தது * தண் அம் துழாய்க்கு
 இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாம் இலம் ** நீ நடுவே
 முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் *
 பனி நஞ்ச மாருதமே * எம்மது ஆவி பனிப்பு இயல்வே?4

Pasuram 5 · corpus 2482

Pasuram 5

Study resources at Uveda
பனிப்பு இயல்வாக * உடைய தண் வாடை * இக் காலம் இவ் ஊர்ப்
 பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி விசும் ** அம் தண்ணம் துழாய்ப்
 பனிப் புயல் சோரும் தடங் கண்ணி மாமைத் திறத்துக்கொலாம் *
 பனிப் புயல் வண்ணன் * செங்கோல் ஒருநான்று தடாவியதே5

Pasuram 6 · corpus 2483

Pasuram 6

Study resources at Uveda
தடாவிய அம்பும் * முரிந்த சிலைகளும் போகவிட்டு *
 கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும் ** அசுரர் மங்கக்
 கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல் *
 நடாவிய கூற்றம் கண்டீர் * உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே6

Pasuram 7 · corpus 2484

Pasuram 7

Study resources at Uveda
ஞாலம் பனிப்பச் செறுத்து * நல் நீர் இட்டு கால் சிதைந்து *
 நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது ** திருமால்
 கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு * தண் பூங்
 காலம் கொலோ? அறியேன் * வினையாட்டியேன் காண்கின்றவே7

Pasuram 8 · corpus 2485

Pasuram 8

Study resources at Uveda
காண்கின்றனகளும் * கேட்கின்றனகளும் காணில் * இந் நாள்
 பாண் குன்ற நாடர் பயில்கின்றன ** இது எல்லாம் அறிந்தோம்
 மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் *
 சேண் குன்றம் சென்று * பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே8

Pasuram 9 · corpus 2486

Pasuram 9

Study resources at Uveda
திண் பூஞ் சுடர் நுதி * நேமி அம் செல்வர் * விண் நாடு அனைய
 வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்? ** இவையோ
 கண் பூங் கமலம் கருஞ் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி *
 வண் பூங் குவளை * மட மான் விழிக்கின்ற மா இதழே9

Pasuram 10 · corpus 2487

Pasuram 10

Study resources at Uveda
மாயோன் * வட திருவேங்கட நாட * வல்லிக்கொடிகாள்
 நோயோ உரைக்கிலும் * கேட்கின்றிலீர் உறையீர் ** நுமது
 வாயோ? அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
 ஆயோ? * அடும் தொண்டையோ? * அறையோ இது அறிவு அரிதே10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.