Corpus pasurams 2488–2497

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 11 · corpus 2488

Pasuram 11

Study resources at Uveda
அரியன யாம் இன்று காண்கின்றன * கண்ணன் விண் அனையாய்
 பெரியன காதம் * பொருட்கோ பிரிவு என ** ஞாலம் எய்தற்கு
 உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கைப் *
 பெரியன கெண்டைக் குலம் * இவையோ வந்து பேர்கின்றவே11

Pasuram 12 · corpus 2489

Pasuram 12

Study resources at Uveda
பேர்கின்றது மணி மாமை * பிறங்கி அள்ளல் பயலை *
 ஊர்கின்றது கங்குல் ஊழிகளே ** இது எல்லாம் இனவே
 ஈர்கின்ற சக்கரத்து எம் பெருமான் கண்ணன் தண் அம் துழாய்
 சார்கின்ற நல் நெஞ்சினார் * தந்து போன தனி வளமே12

Pasuram 13 · corpus 2490

Pasuram 13

Study resources at Uveda
தனி வளர் செங்கோல் நடாவு * தழல் வாய் அரசு அவியப்
 பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து ** பார் முழுதும்
 துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
 இனி வளை காப்பவர் ஆர்? * எனை ஊழிகள் ஈர்வனவே13

Pasuram 14 · corpus 2491

Pasuram 14

Study resources at Uveda
ஈர்வன வேலும் அம் சேலும் * உயிர்மேல் மிளிர்ந்து இவையோ *
 பேர்வனவோ அல்ல * தெய்வ நல் வேள் கணைப் ** பேர் ஒளியே
 சோர்வன நீலச் சுடர் விடு மேனி அம்மான் * விசும்பு ஊர்
 தேர்வன * தெய்வம் அன்னீர கண்ணோ இச் செழுங் கயலே?14

Pasuram 15 · corpus 2492

Pasuram 15

Study resources at Uveda
கயலோ நும கண்கள்? என்று களிறு வினவி நிற்றீர் *
 அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை? ** கடல் கவர்ந்த
 புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
 பயலோ இலீர் * கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே15

Pasuram 16 · corpus 2493

Pasuram 16

Study resources at Uveda
பலபல ஊழிகள் ஆயிடும் * அன்றி ஓர் நாழிகையைப் *
 பலபல கூறிட்ட கூறு ஆயிடும் * கண்ணன் விண் அனையாய்! **
 பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் *
 பலபல சூழல் உடைத்து * அம்ம வாழி இப் பாய் இருளே16

Pasuram 17 · corpus 2494

Pasuram 17

Study resources at Uveda
இருள் விரிந்தால் அன்ன * மா நீர்த் திரைகொண்டு வாழியரோ! *
 இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் ** அரவு அணைமேல்
 இருள் விரி நீலக் கரு நாயிறு சுடர் கால்வது போல் *
 இருள் விரி சோதிப் * பெருமான் உறையும் எறி கடலே17

Pasuram 18 · corpus 2495

Pasuram 18

Study resources at Uveda
கடல் கொண்டு எழுந்தது வானம் * அவ் வானத்தை அன்றிச் சென்று *
 கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது * கண்ணன் மண்ணும் விண்ணும் **
 கடல் கொண்டு எழுந்த அக் காலம் கொலோ? புயல் காலம்கொலோ? *
 கடல் கொண்ட கண்ணீர் * அருவிசெய்யாநிற்கும் காரிகையே 18

Pasuram 19 · corpus 2496

Pasuram 19

Study resources at Uveda
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று * கார் கொண்டு இன்னே
 மாரி கை ஏறி * அறையிடும் காலத்தும் ** வாழியரோ
 சாரிகைப் புள்ளர் அம் தண்ணம் துழாய் இறை கூய் அருளார் *
 சேரி கை ஏறும் * பழியாய் விளைந்தது என் சில்மொழிக்கே 19

Pasuram 20 · corpus 2497

Pasuram 20

Study resources at Uveda
சில்மொழி நோயோ * கழி பெருந் தெய்வம் * இந் நோய் இனது என்று
 இல் மொழி கேட்கும் * இளந் தெய்வம் அன்று இது ** வேல நில் நீ
 என் மொழி கேள்மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான் *
 சொல் மொழி மாலை * அம் தண்ணம் துழாய்கொண்டு சூட்டுமினே20

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.