Corpus pasurams 2568–2577

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 91 · corpus 2568

Pasuram 91

Study resources at Uveda
சுருங்கு உறி வெண்ணெய் * தொடு உண்ட கள்வனை * வையம் முற்றும்
 ஒருங்குற உண்ட * பெரு வயிற்றாளனை ** மாவலிமாட்டு
 இருங் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டிச் சென்ற *
 பெருங் கிறியானை அல்லால் * அடியேன் நெஞ்சம் பேணலதே91

Pasuram 92 · corpus 2569

Pasuram 92

Study resources at Uveda
பேண் நலம் இல்லா அரக்கர் * முந்நீர பெரும் பதிவாய் *
 நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று ** நின்னை விண்ணோர்
 தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று *
 காணலும் ஆம்கொல் என்றே? * வைகல் மாலையும் காலையுமே92

Pasuram 93 · corpus 2570

Pasuram 93

Study resources at Uveda
காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த * கங்குல் குறும்பர் *
 மாலை வெய்யோன் பட * வையகம் பாவுவர் ** அன்ன கண்டும்
 காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து *
 மாலை நல் நாவில் கொள்ளார் * நினையார் அவன் மைப் படியே93

Pasuram 94 · corpus 2571

Pasuram 94

Study resources at Uveda
மைப் படி மேனியும் * செந்தாமரைக் கண்ணும் வைதிகரே *
 மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார் **
 எப்படி ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைக்கும் என்னும் *
 அப்படி யானும் சொன்னேன் * அடியேன் மற்று யாது என்பனே? 94

Pasuram 95 · corpus 2572

Pasuram 95

Study resources at Uveda
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு * அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் *
 மூது ஆவியில் தடுமாறும் * உயிர் முன்னமே ** அதனால்
 யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும் *
 மாதாவினை பிதுவை * திருமாலை வணங்குவனே95

Pasuram 96 · corpus 2573

Pasuram 96

Study resources at Uveda
வணங்கும் துறைகள் * பல பல ஆக்கி * மதி விகற்பால்
 பிணங்கும் சமயம் * பல பல ஆக்கி ** அவை அவைதோறு
 அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் *
 இணங்கு நின்னோரை இல்லாய் * நின்கண் வேட்கை எழுவிப்பனே96

Pasuram 97 · corpus 2574

Pasuram 97

Study resources at Uveda
எழுவதும் மீண்டே * படுவதும் பட்டு * எனை ஊழிகள் போய்க்
 கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் ** இமையோர்கள் குழாம்
 தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு *
 கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் * உண்டோ கண்கள் துஞ்சுதலே?97

Pasuram 98 · corpus 2575

Pasuram 98

Study resources at Uveda
துஞ்சா முனிவரும் * அல்லாதவரும் தொடர நின்ற *
 எஞ்சாப் பிறவி இடர் கடிவான் ** இமையோர் தமக்கும்
 தன் சார்வு இலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே *
 நெஞ்சால் நினைப்பு அரிதால் * வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே98

Pasuram 99 · corpus 2576

Pasuram 99

Study resources at Uveda
ஈனச் சொல் ஆயினும் ஆக * எறி திரை வையம் முற்றும் *
 ஏனத்து உருவாய் இடந்த பிரான் * இருங் கற்பகம் சேர் **
 வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் * மற்று எல்லா எவர்க்கும் *
 ஞானப் பிரானை அல்லால் இல்லை * நான் கண்ட நல்லதுவே99

Pasuram 100 · corpus 2577

Pasuram 100

Study resources at Uveda
நல்லார் * நவில் குருகூர் நகரான் * திருமால் திருப் பேர்
 வல்லார் * அடிக் கண்ணி சூடிய ** மாறன் விண்ணப்பம் செய்த
 சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் *
 பொல்லா அருவினை * மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே100

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.