Corpus pasurams 2558–2567

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 81 · corpus 2558

Pasuram 81

Study resources at Uveda
உறுகின்ற கன்மங்கள் * மேலன ஓர்ப்பிலராய் * இவளைப்
 பெறுகின்ற தாயர் * மெய்ந் நொந்து பெறார்கொல்? ** துழாய் குழல்வாய்த்
 துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும் சூழ்கின்றிலர் *
 இறுகின்றதால் இவள் ஆகம் * மெல் ஆவி எரி கொள்ளவே81

Pasuram 82 · corpus 2559

Pasuram 82

Study resources at Uveda
எரி கொள் செந் நாயிறு * இரண்டு உடனே உதய மலைவாய் *
 விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் ** மீண்டு அவற்றுள்
 எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போல எம் போலியர்க்கும் *
 விரிவ சொல்லீர் இதுவோ * வையம் முற்றும் விளரியதே?82

Pasuram 83 · corpus 2560

Pasuram 83

Study resources at Uveda
விளரிக் குரல் அன்றில் * மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை *
 முளரிக் குரம்பை இதுஇதுவாக ** முகில் வண்ணன் பேர்
 கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம் *
 தளரின் கொலோ அறியேன் * உய்யல் ஆவது இத் தையலுக்கே?83

Pasuram 84 · corpus 2561

Pasuram 84

Study resources at Uveda
தையல் நல்லார்கள் குழாங்கள் * குழிய குழுவினுள்ளும் *
 ஐய நல்லார்கள் * குழிய விழவினும் ** அங்கு அங்கு எல்லாம்
 கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான் *
 மைய வண்ணா மணியே * முத்தமே என் தன் மாணிக்கமே84

Pasuram 85 · corpus 2562

Pasuram 85

Study resources at Uveda
மாணிக்கம் கொண்டு * குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி *
 ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை ** உலகு அளந்த
 மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா *
 ஆணிப்பொன்னே * அடியேன் அடி ஆவி அடைக்கலமே85

Pasuram 86 · corpus 2563

Pasuram 86

Study resources at Uveda
அடைக் கலத்து ஓங்கு * கமலத்து அலர் அயன் சென்னி என்னும் *
 முடைக் கலத்து ஊண் * முன் அரனுக்கு நீக்கியை ** ஆழி சங்கம்
 படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் *
 புடைக்கலந்தானை * எம்மானை என் சொல்லிப் புலம்புவனே?86

Pasuram 87 · corpus 2564

Pasuram 87

Study resources at Uveda
புலம்பும் கன குரல் * போழ் வாய அன்றிலும் பூங் கழி பாய்ந்து *
 அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ** ஆங்கு அவை நின்
 வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக * வையம்
 சிலம்பும்படி செய்வதே * திருமால் இத் திருவினையே87

Pasuram 88 · corpus 2565

Pasuram 88

Study resources at Uveda
திருமால் உரு ஒக்கும் மேரு * அம் மேருவில் செஞ்சுடரோன் *
 திருமால் திருக்கைத் திருச் சக்கரம் ஒக்கும் ** அன்ன கண்டும்
 திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் *
 திருமால் தலைக்கொண்ட நங்கட்கு * எங்கே வரும் தீவினையே?88

Pasuram 89 · corpus 2566

Pasuram 89

Study resources at Uveda
தீவினைக்கு அரு நஞ்சை * நல் வினைக்கு இன் அமுதத்தினை *
 பூவினை மேவிய * தேவி மணாளனை ** புன்மை எள்காது
 ஆவினை மேய்க்கும் வல் ஆயனை * அன்று உலகு ஈர் அடியால்
 தாவின ஏற்றை எம்மானை * எஞ்ஞான்று தலைப்பெய்வனே?89

Pasuram 90 · corpus 2567

Pasuram 90

Study resources at Uveda
தலைப்பெய்து யான் உன் * திருவடி சூடும் தகைமையினால் *
 நிலைப்பு எய்த ஆக்கைக்கு * நோற்ற இம் மாயமும் ** மாயம் செவ்வே
 நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர் குழாம் *
 தொலைப் பெய்த நேமி எந்தாய் * தொல்லை ஊழி சுருங்கலதே90

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.