Corpus pasurams 2202–2211

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 21 · corpus 2202

Pasuram 21

Study resources at Uveda
தாம் உளரே * தம் உள்ளம் உள் உளதே * தாமரையின்
 பூ உளதே * ஏத்தும் பொழுது உண்டே ** வாமன்
 திரு மருவு * தாள் மருவு சென்னியரே * செவ்வே
 அரு நரகம் சேர்வது அரிது 21

Pasuram 22 · corpus 2203

Pasuram 22

Study resources at Uveda
அரியது எளிது ஆகும் * ஆற்றலால் மாற்றி *
 பெருக முயல்வாரைப் பெற்றால் ** கரியது ஓர்
 வெண் கோட்டு மால் யானை * வென்று முடித்தன்றே *
 தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து 22

Pasuram 23 · corpus 2204

Pasuram 23

Study resources at Uveda
தாழ்ந்து வரம் கொண்டு * தக்க வகைகளால் *
 வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் ** தாழ்ந்த
 விளங் கனிக்குக் * கன்று எறிந்து வேற்று உருவாய் * ஞாலம்
 அளந்து அடிக்கீழ்க் கொண்ட அவன் 23

Pasuram 24 · corpus 2205

Pasuram 24

Study resources at Uveda
அவன் கண்டாய் நல் நெஞ்சே * ஆர் அருளும் கேடும் *
 அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் ** அவன் கண்டாய்
 காற்று தீ நீர் வான் * கரு வரை மண் கார் ஓதச் *
 சீற்றத் தீ ஆவானும் சென்று 24

Pasuram 25 · corpus 2206

Pasuram 25

Study resources at Uveda
சென்றது இலங்கைமேல் * செவ்வே தன் சீற்றத்தால் *
 கொன்றது இராவணனை கூறுங்கால் ** நின்றதுவும்
 வேய் ஓங்கு தண் சாரல் * வேங்கடமே * விண்ணவர் தம்
 வாய் ஓங்கு தொல் புகழான் வந்து 25

Pasuram 26 · corpus 2207

Pasuram 26

Study resources at Uveda
வந்தித்து அவனை * வழி நின்ற ஐம்பூதம் *
 ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் ** உந்திப்
 படி அமரர் வேலையான் * பண்டு அமரர்க்கு ஈந்த *
 படி அமரர் வாழும் பதி 26

Pasuram 27 · corpus 2208

Pasuram 27

Study resources at Uveda
பதி அமைந்து நாடிப் * பருத்து எழுந்த சிந்தை *
 மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி ** கதி மிகுத்து அம்
 கோல் தேடி ஓடும் * கொழுந்ததே போன்றதே *
 மால் தேடி ஓடும் மனம் 27

Pasuram 28 · corpus 2209

Pasuram 28

Study resources at Uveda
மனத்து உள்ளான் வேங்கடத்தான் * மா கடலான் * மற்றும்
 நினைப்பு அரிய * நீள் அரங்கத்து உள்ளான் ** எனைப் பலரும்
 தேவாதி தேவன் * எனப்படுவான் * முன் ஒரு நாள்
 மா வாய் பிளந்த மகன் 28

Pasuram 29 · corpus 2210

Pasuram 29

Study resources at Uveda
மகனாகக் கொண்டு எடுத்தாள் * மாண்பு ஆய கொங்கை *
 அகன் ஆர உண்பன் என்று உண்டு ** மகனைத் தாய்
 தேறாத வண்ணம் * திருத்தினாய் * தென் இலங்கை
 நீறு ஆக எய்து அழித்தாய்! நீ 29

Pasuram 30 · corpus 2211

Pasuram 30

Study resources at Uveda
நீ அன்று உலகு அளந்தாய் * நீண்ட திருமாலே! *
 நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் ** நீ அன்று
 கார் ஓதம் முன் கடைந்து * பின் அடைத்தாய் மா கடலை *
 பேர் ஓத மேனிப் பிரான்! 30

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.